Rajinikanth
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தாலும், உலகம் முழுவதும் பல கோடி பேரை ரசிகர்களாக கொண்டிருந்தாலும், இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தாலும் அவரது எளிமையை குறித்து பலரும் வியந்து பேசுவது உண்டு. சினிமா உலகில் புகழின் உச்சியில் இருந்தாலும் சக கலைஞர்களை மதிப்பதில் அவருக்கு ஈடு இணையே இல்லை.
ரஜினிகாந்த் தனது வாழ்க்கையை மிகவும் எளிமையாக வகுத்துக்கொண்டவர். அவர் இமய மலை பயணம் மேற்கொள்ளும்போது ஜனங்களோடு ஜனங்களாக சேர்ந்து சாப்பிடுவார், மரத்தடியில் படுத்து தூங்குவார். இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று பலரும் வியந்தது உண்டு. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தின் எளிமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த மற்றொரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
Rajinikanth
“எஜமான்” திரைப்படம் உருவானபோது ஆந்திராவின் ராஜமுந்திரி என்ற பகுதியில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. அப்போது அத்திரைப்படத்தின் நடிகர்களான ரஜினிகாந்த், மீனா உட்பட பலரும் ராஜமுந்திரிக்கு வந்திருந்தனர். அந்த பகுதியில் ஒரே ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்தான் இருந்ததாம். அதில் ஒரே ஒரு ஷூட் ரூம்தான் இருந்திருக்கிறது.
ரஜினிகாந்திற்காக அந்த ஷூட் ரூம் ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற அனைவருக்கும் ஏசி ரூம்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்த ரஜினிகாந்த், “இயக்குனர் எங்கே தங்குகிறார்?” என கேட்க, அதற்கு மேனேஜர், “அவர் ஏசி ரூமில் தங்குகிறார்” என கூறினார். அதற்கு ரஜினிகாந்த், “ஏன் அவர் ஏசி ரூம்ல தங்கனும்” என கேட்க, அதற்கு மேனேஜர், “இந்த ஹோட்டலில் ஒரே ஒரு ஷூட் ரூம்தான் இருந்தது” என கூறியிருக்கிறார்.
Rajinikanth
உடனே ரஜினிகாந்த், “அப்படி என்றால் நான் ஏசி ரூமில் இருந்துவிடுகிறேன். இயக்குனருக்கு ஷூட் ரூமை கொடுங்கள்” என சொல்ல, அதற்கு இயக்குனர், “வேண்டாம் சார், எனக்கு இவ்வளவு பெரிய ரூம் வேண்டாம்” என கூற, உடனே ரஜினிகாந்த், “எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய ரூம்” என கூறியிருக்கிறார். இவ்வாறு இருவருமே வேண்டாம் என்று கூற, கடைசியில் நடிகை மீனாவுக்கு அந்த ஷூட் ரூம் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ரஜினிகாந்தின் எளிமையை பார்த்து தயாரிப்பாளர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
Karur: தற்போது…
Karur: தவெக…
TVK Vijay:…
நடிகரும் தவெக…
TVK Karur:…