கிரீஸில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!.. அடுத்து தர்மன் ஷூட்டிங் தான்!..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் திருமணத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் கிரீஸ் நாட்டிற்குச் சென்றிருந்த நிலையில் தற்போது சென்னை திரும்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் கலந்துக்கொண்டு மனசிலாயோ பாடலுக்கு ரஜினிகாந்த் உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.
Superstar #Rajinikanth is back in Chennai! 💥🤩 #Jailer2 #Dharman #SuperstarRajinikanth https://t.co/4vlxFSjpOR
— Vasanth Raj (@vasanthraj001) November 17, 2026
திருமணம் முடிந்ததும் மற்ற பிரபலங்கள் சென்னை திரும்பிய நிலையில், ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிலேயே சில நாட்கள் தங்கி எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
பேரக்குழந்தைகளுடன் கைகோர்த்து ரஜினி நடந்து செல்லும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் அந்தப் புகைப்படத்திற்கு நடிகை ராஷி கண்ணாவும் 'How cute!' எனக் கமெண்ட் போட்டிருந்தார். ராஷி கண்ணா ரஜினிகாந்துடன் தர்மன் படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், கிரீஸ் நாட்டில் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழித்த ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் தர்மன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
