கே.எஸ்.ரவிகுமாரின் 'படையப்பா 2'-வுக்கு நோ சொல்லிவிட்டு தான் 'தர்மன்'-க்கு ஓகே சொன்னாரா ரஜினி?... வருத்தத்தில் ரசிகர்கள்!

 
Rajini ks ravikumar padayappa 2 dharman

கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் புதிய படமான 'தர்மன்'-ஐ அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார், 'உலக நாயகன்' கமல்ஹாசன் தான் தயாரித்து வருகிறார். 

இதன் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. தலைவரின் 173-வது படமான இதை இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, சிபி சக்கரவர்த்தி ஆகியோர் முதலில் பண்ணுவதாக இருந்து, அதன் பிறகே அந்த வாய்ப்பு அஸ்வத்துக்கு சென்றது.

இது பற்றி ரஜினியே 'தர்மன்' படத்தின் பூஜையின் போது கூட பேசியிருந்தார். ஆனால், கே.எஸ்.ரவிகுமார் என்ன மாதிரி படம் பண்ண விரும்பினார் என்பது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

தற்போது, கே.எஸ்.ரவிகுமார் ரஜினியிடம் 'படையப்பா 2' படத்துக்கான கதையை தான் 'தலைவர் 173'-க்காக சொல்லியிருந்தார் என கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. 'படையப்பா' முதல் பாகத்தில் ரஜினியுடன் சேர்ந்து சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், ராதாரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அப்படம் மாஸ் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

From Around the web