×

ரஜினிகாந்த் எதையும் தவறாக பேசவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவமரியாதையுடன் பேசியதாக திகவினர், திமுகவினர் மட்டுமின்றி அதிமுக அமைச்சர்கள் சிலரும் கூறியிருந்த நிலையில் பெரியார் குறித்து ரஜினி தவறாக எதுவும் பேசவில்லை
 

பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவமரியாதையுடன் பேசியதாக திகவினர், திமுகவினர் மட்டுமின்றி அதிமுக அமைச்சர்கள் சிலரும் கூறியிருந்த நிலையில் பெரியார் குறித்து ரஜினி தவறாக எதுவும் பேசவில்லை என்றும் திகவினர் வேண்டுமென்றே அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார் 

இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’ரஜினி எப்போதும் மனதில் பட்டதை, உண்மையை தான் பேசுவார் என்றும் அவர் ஜெயலலிதா, கருணாநிதி உள்பட பலரை விமர்சனமும் செய்துள்ளார் நல்ல விதமாகவும் பேசியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் 

1971 ஆம் ஆண்டு நடந்த ஊர்வலத்தின்போது நடந்ததைதான் ரஜினிகாந்த் பேசியுள்ளார் என்றும் அவர் பெரியார் குறித்து தவறாக எதுவுமே பேசவில்லை என்றும் கூறியுள்ளார். ரஜினி ஒரு ஆன்மீகவாதி என்றும் அவர் மீது வேண்டுமென்றே திகவினர் மற்றும் திமுகவினர் பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனர் என்றும் அமைச்சர் தனது பேட்டியில் கூறியுள்ளார் 

ஒரு ஆன்மீகவாதியை கொடும்பாவி எரித்து வீட்டை முற்றுகையிடுவோம் என்று திகவினர் செய்து வருகின்றார்கள் என்றும் அவர்களை திமுகவினர் தூண்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் அதிமுக அமைச்சர்கள் சிலர் ரஜினியை விமர்சனம் செய்து பேசி வந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி ரஜினியை ஆதரித்துப் பேசுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News