என்னை ஒருத்தரும் மதிக்கல… மனம் திறந்த ரஜினி!

 
என்னை ஒருத்தரும் மதிக்கல… மனம் திறந்த ரஜினி!

அரசியலை கைவிட்ட சூப்பர் ஸ்டார்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக சினிமா துறையில் விளங்கி வருகிறார். இதனிடையே இவர் அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழையவும் முயற்சித்தார். ஆனால் ஆன்மீகவாதிகளின் அறிவுரையின்படி அவர் அரசியலில் முழுமூச்சோடு இறங்காமல் பாதியிலே கைவிட்டு விட்டார்.

என்னை ஒருத்தரும் மதிக்கல… மனம் திறந்த ரஜினி!

அந்த பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால். தளபதி விஜய் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் கட்சி ஆரம்பத்து இன்று முதல்வராக முதல் தேர்தலிலேயே பொறுப்பேற்று விட்டார்.

ஆன்மீகம்:

இப்படியான நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பல தகவல்களை குறித்து பேசி இருந்தார். அப்போது "நான் முதன் முதலாக இவரோட ஆசிரமத்திற்கு வரும்போது இரண்டு நாட்கள் மட்டுமே தங்க வேண்டும் என்று வந்தேன்.

ஆனால் 15 நாட்கள் இருந்தேன். காரணம் ஆசிரமத்தின் அமைப்பு மற்றும் நடத்தும் முறை எனக்கு மிகப்பெரிய மன அமைதியும் புத்துணர்ச்சியும் கொடுத்தது. இங்கு குதிரைகள், நூற்றுக்கணக்கான மாடுகள் இருந்தது. அதில் ஒரு குதிரையின் பெயர் ரஜினி.

யாரும் மதிக்கல

அது எனக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஒரு நாள் என்னை குரு கூப்பிட்டு நாளை பக்தர்களை சந்திக்கிறேன். நீங்களும் என்னுடன் வாருங்கள் என்றார். நான் முதலில் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். காரணம் என்னை பார்த்தால் பக்தர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

என்னை ஒருத்தரும் மதிக்கல… மனம் திறந்த ரஜினி!

அது அந்த இடத்திற்கு இடையூறாக இருக்கும் என எண்ணி வேண்டாம் எனக் கூறினேன். ஆனால் குருதேவ் என்னை கட்டாயம் வரச் சொன்னார். ஆனால் நான் நினைத்தது ஒன்று அங்கு நடந்தது வேறு. ஆம் நான் ஆட்டோகிராப் போட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்றேன்.

ஆனால், அங்கு போய் பார்த்தால் ஒருத்தர் கூட என்னை கண்டுக்கவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னை பார்த்தவர்கள் கூட என்னிடத்தில் வந்து யாரும் ஆட்டோகிராப் கேட்கவே இல்லை. புகைப்படமும் எடுத்துக் கொள்ளவில்லை.

அப்போதுதான் சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தை விட ஆன்மீகம் கொடுக்கும் சக்தி மிகப்பெரியது என்று நான் உணர்ந்து கொண்டேன் என ரஜினிகாந்த் பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.

From Around the web