Categories: Cinema News latest news throwback stories

தற்கொலை பண்ணிக்க நினைச்ச ரஜினிகாந்த்… நண்பர் சொன்ன கதையால் சூப்பர்ஸ்டாராக மாறிய ஆச்சரியம்!

Rajinikanth: தமிழ் சினிமாவில் இன்று சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் ரொம்பவே சேட்டை பிடித்த ஆளாக இருந்தாராம். அதை தொடர்ந்து அவர் செய்த தொல்லையால் வீட்டில் பிரச்னையாகி தற்கொலை முடிவுக்கே சென்றவரை அவர் நண்பர் தான் மாற்றி இருக்கிறார்.

அமைதியாக வலம் வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சின்ன வயதில் ரொம்பவே சேட்டை செய்வாராம். அதை பொறுத்துக்கொள்ளாத ரஜினிகாந்தின் அண்ணன் அவரை அழைத்துக்கொண்டு போய் ராமகிருஷ்ணா மடத்தில் சேர்த்து விடுகிறார். காலையில் எழுந்து அதிகாலை பச்ச தண்ணீரில் குளிக்க வேண்டும்.

இதையும் படிங்க: LCUவுக்கு தலையாட்டிய தலைவர்!.. அந்த உச்ச நடிகரையும் உள்ளே இழுக்க லோகேஷ் கனகராஜ் பலே ஸ்கெட்ச்!..

சுலோகம் படிக்க வேண்டும். அங்கு இருக்கும் வேலைகளை செய்ய வேண்டும். இதில் படிக்கவும் வேண்டும். ஒரு கட்டத்தில் இதனை ரஜினி ஈடுபாட்டுடன் செய்து வந்து இருக்கிறார். 10வது முடித்தவுடன் மீண்டும் வெளியில் வந்து விடுகிறார்.

நண்பர்களுடன் இணைந்து மீண்டும் தீய பழக்கங்கள் நிறைய பழகுகிறார். ஒரே குடியால் கெட்டுப்போகும் நிலைக்கு போய் விடுகிறார். இதில் கடுப்பான அவர் குடும்பம் அவருடன் பேசுவதையே தவிர்த்து விடுகின்றனர். இதனால் மீண்டும் மனமுடைந்த ரஜினிகாந்த் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைக்கிறார்.

இதையும் படிங்க: செம க்யூட் ஜோடி!. சிறப்பா நடந்த அசோக் செல்வன் திருமணம்!.. வைரல் புகைப்படங்கள்!..

அப்போது தன் நண்பனை பார்க்க செல்கிறார். மொட்டை வெயிலில் நின்று சாமி படங்களை வரைந்து கொண்டு இருக்கும் நண்பர் வரைந்த ஒரு ஓவியம் ரஜினியை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர் தான் ராகவேந்திரர். குண்டான தேகம், ஒளிவீசும் கண்கள் என அவரை பார்க்கும் போது அசந்து விடுகிறார்.

நண்பரிடம் ராகவேந்திரர் வாழ்க்கை வரலாற்றினை கேட்டு தெரிந்து கொள்கிறார். ஒரு நாள் முழுதும் தியானம் இருந்தால் கிடைக்கும் நிம்மதியை போல மனசு லேசாகிறதாம். அப்போதே மனதில் இருந்த தற்கொலை எண்ணமும் காணாமல் போய் விடுகிறது. உடனே பெங்களூர் சென்றவர் அங்கு ராகவேந்திரரை தொடர்ந்து வழிப்பட தொடங்குகிறார். அதுதான் இன்று வரை அவருக்கும் ராகவேந்திரருக்குமான பந்தமாகி போனது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily