நான் பேசினாலும் பிரச்சனை.. பேசலனாலும் பிரச்சனை!. தர்மன் பட விழாவில் புலம்பிய ரஜினி!..
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் அவரின் 173வது திரைப்படத்தின் ஷூட்டிங் நாளை துவங்கவிருக்கிறது. அஸ்வத் மாரிமுது இயக்கவுள்ள இந்த படத்திற்கு தர்மன் என தலைப்பு வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
இந்நிலையில், இந்த படம் தொடர்பான விழாவில் பேசிய நடிகர் ரஜினி ‘ பேசுவதற்கே தயக்கமாக இருக்கிறது. நான் பேசினாலே பிரச்சினைதான். எனக்கும் பிரச்சனை.. மற்றவர்களுக்கும் பிரச்சனை.. நான் பேசவில்லை என்றால் கிண்டல் செய்கிறார்கள்.. நான் பேசவில்லையெனில் ‘வாயில் கொழுக்கட்டையா இருக்கு.. பேசினால் என்ன/’ என கேட்பார்கள். நான் ஏதாவது பேசினால் ‘இப்போது பேசுவதை முன்னாடியே பேச மாட்டியா?’ என திட்டுவார்கள்.. நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது.. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்.
எனது 173வது படத்திற்கு முதலில் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, சிபி சக்கரவர்த்தி ஆகியோரை இயக்குனராக ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அவர்கள் மூன்று பேருக்குமே வேறு வெவ்வேறு படங்கள் இருந்தால் அவர்கள் இந்த படத்தில் இருந்து விலகினர். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் நடிக்க இயக்குனர் ஸ்ரீதரிடம் என்னை சிபாரிசு செய்தது கமல்தான். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் என் நடிப்பை வெகுவாக பாராட்டி ஒத்துழைப்பு கொடுத்தார். ஆரம்ப காலத்தில் எனக்கு கமல் செய்த உதவிகளையும் ஊக்கத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம். பேட்ட படத்திற்கு பிறகு நடிகை சிம்ரனுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்’ என ரஜினி பேசினார்.
