தலைவர் 173ன் தரமான அப்டேட் வரப்போகுது!.. சூப்பர் ஸ்டார் ரசிகர்களே ரெடியா இருங்க!..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 'தலைவர் 173' திரைப்படத்தின் புதிய அப்டேட் குறித்து ராஜ் கமல் ஃபில்ம் இண்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் லம; ஹாசன் ஆகியோர் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளதால், 'தலைவர் 173' திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ் சினிமாவின் முக்கியமான கூட்டணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' படங்களின் இயக்குநரான அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். தனது வித்தியாசமான திரைக்கதை பாணிக்காக அறியப்படும் அஸ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்தை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் காட்டப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. டாக்டர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் 'தலைவர் 173' திரைப்படம், 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள புதிய அப்டேட் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
