Connect with us

Cinema News

மேடையில் அந்த தயாரிப்பாளரை போட்டுவிட்ட ரஜினிகாந்த்.. ஆனால் கவலைப்படாமல் சிரித்த பிரபலம்!

Rajinikanth: தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோக்கள் மேடையில் பேசும்போது முன்னரே பிரிப்பேர் செய்து கொண்டு வந்து பேசுவதாகவே ஒரு எண்ணம்  ரசிகர்களுக்கும் இருக்கிறது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு கொடுத்த ஸ்கிரிப்டை மறைத்து வைத்துவிட்டு ஒரு தயாரிப்பாளரை மேடையில் போட்டுக் கொடுத்த சுவாரசிய சம்பவம் நடந்திருக்கிறது.

முதல் சில நாட்கள் ரஜினி மேடையில் பேசவே பதட்டப்படுவாராம். இதனால் அதை பல இடங்களில் தவிர்த்து வந்ததை ஏவிஎம் சரவணன் கவனித்து கொண்டிருக்கிறார். உடனே ஒரு நாள் குறிப்பிட்ட படத்தின் விழாவில் நீங்கள் பேச வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டாராம். எஸ்பி முத்துராமனை அழைத்து அதற்கான ஸ்கிரிப்ட் எழுத சொல்லி அனுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: திடீரென கன்னத்தில் ரஜினி செய்த ’அந்த’ விஷயம்… ரம்பாவை தொடர்ந்து அடுத்து ஷாக் சொன்ன நடிகை…

அந்த விழாவில் ஸ்கிரிப்ட் வைத்து சில நிமிடங்கள் பேசினாலும் அதில்  தைரியம் கிடைத்ததாம். இதனால் பேப்பரை மடித்து வைத்துவிட்டு தனக்கு வந்தது தைரியமாக பேசியிருக்கிறார். இதற்கு அடுத்த நாளிலிருந்து அவருக்கு ஸ்கிரிப்ட் எதுவும் எந்த பட விழாவில் பேசுவதற்கும் தேவைப்படவில்லை.

அப்படி ஒரு நாள் மனிதன் திரைப்படத்தின் விழாவில் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போ எல்லாரும் ஏவிஎம் சரவணன் அவர்களை நல்லதாகவே கூறுகிறார்கள். நான் கொஞ்சம் கெட்ட விஷயத்தையும் சொல்லப் போறேன் என்கிறார்.

இதையும் படிங்க: வாரிசு நடிகையுடன் ஜல்சா செய்த தனுஷ்… விவகாரத்து பிறகு உடனே திருமணம்… உண்மையை உடைத்த பிரபலம்!

எனக்கு மேடையில் பேசவே தெரியாது. ரஜினிக்கு நல்லா பேச தெரியும்னு சொல்லியே என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறார். இது எப்படியிருக்குன்னா, பெரிய அறிவாளி மடையனைப் பார்த்து, ”நீ நல்லா குதிக்கிறே, குதிக்கிறே” எனச் சொல்லியே எப்படி குதிக்க வைச்சாரோ அப்படி இருக்கு என்றாராம்.

Continue Reading

More in Cinema News

To Top