Rajinikanth: ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்த் உணர்ச்சிவசமாக ட்வீட் செய்து இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தலைவர் 170வது படத்தினை டி.ஜே. ஞானவேல் எழுதி இயக்க இருக்கிறார். இதை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆரை இதுவரை இப்படி யாரும் புகழ்ந்திருக்க மாட்டாங்க! போட்டி இருந்தாலும் உண்மையான பாசத்தை காட்டிய கலைஞர்
இது ரஜினிகாந்தின் 170வது படம் என்பதால், தலைவர் 170 என்ற தற்காலிக தலைப்புடன் 2023ல் அறிவிக்கப்பட்டது. 2023 அக்டோபரில் இருந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
ஜெய் பீம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவை வைத்து கங்குவா படத்தினை இயக்க இருந்தார். ஆனால் சூர்யா மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் ஞானவேல் தற்போது ரஜினி படத்தில் இணைந்து விட்டார். இப்படத்தில் ரஜினிகாந்த் முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில் அர்ஜுன் சர்ஜா ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: அழுது புலம்பிய மீனாவுக்கு சரியான அட்வைஸ் கொடுத்த அம்மா..! ஸ்ருதி ஆசையை கெடுத்த ரவி..!
இந்நிலையில் ரஜினிகாந்த் 33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் “தலைவர் 170” படத்தில் எனது குருவான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது! என ட்வீட் தட்டி இருக்கிறார். அதனுடன் இருவரும் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் ட்வீட்டைக் காண: https://twitter.com/rajinikanth/status/1717064523356766250
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…