Connect with us

Cinema News

அந்த படத்தை வேணும்னா கேன்சல் பண்ணிடுவா?. ரஜினியை மிரள வைத்த நடிகை…

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் சினிமாவிற்கு வந்த பிரபலங்கள் பலர். ஏனெனில் பாலிவுட்டில் நடிகைகளுக்கு பொறுத்தவரை அதிகமான போட்டிகள் இருந்தன. வெள்ளை நிறம் என்பதே நடிகையாவதற்கு முக்கிய தகுதியாக உள்ளது.

ஆனால் வட இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் வெள்ளையாக இருப்பதால் அங்கு கதாநாயகிகளுக்கு அதிக போட்டிகள் உள்ளன. பழைய நடிகை லெட்சுமியில் துவங்கி தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் வட இந்தியாவை சேர்ந்தவர்களே.

அப்படியாக தமிழ் சினிமாவிற்கு வந்தவர்தான் நடிகை கிரண். இவர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பல போட்டிகளுக்கு நடுவே பாலிவுட்டில் யாதின் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பதற வைத்த நடிகை:

ஜெமினி படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்தது. அதே சமயத்தில் அவருக்கு ரஜினி நடிக்கும் பாபா படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி எவ்வளவு பெரிய நடிகர் என்பதை அப்போது அறிந்திருந்தார் கிரண். எனவே பாபா படத்தில் நடிப்பதற்காக, ஜெமினி படத்தை விட்டு விலக முடிவு செய்தார்.

ஏற்கனவே ஏ.வி.எம் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸை திரும்ப கொடுத்துவிடலாம் என முடிவெடுத்துள்ளார். இந்த செய்தி ரஜினிக்கு சென்றவுடன் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் இவ்வளவு வருடங்களாக அவருக்கு ஏ.வி.எம் நிறுவனத்துடன் நல்ல நட்பு இருந்து வந்தது.

இப்போது கிரண் செய்யும் காரியம் அந்த நட்பில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என நினைத்தார் ரஜினி. எனவே கிரணை தொடர்புக்கொண்டு ஜெமினி படத்திலேயே அவரை நடிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார் ரஜினி.

Continue Reading

More in Cinema News

To Top