Categories: latest news throwback stories

கடும் சிக்கலில் மாட்டிய ரஜினி… தூக்கி விட்ட கண்ணதாசன்… அட அந்தப் படமா?

அரை நூற்றாண்டுகளாகத் தமிழ்சினிமாவில் இன்னைக்கும் தன்னோட இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் சூப்பர்ஸ்டார். காரணம் என்னன்னா அவரோட யதார்த்தமான நடிப்பு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிச்ச நடிப்பு.

அவர் எடுத்த உடனேயே பாய்ச்சல் வேகத்துல போகல. ஆரம்பத்துல சின்ன சின்ன வேடங்கள். அப்புறம் வில்லன். அதுக்கு அப்புறம் தான் ஹீரோ. 16 வயதினிலே படத்தில் ரஜினி வில்லன் தான்.

Also read: அடுத்த 2 வருஷத்துக்கு அம்மணி ரொம்ப பிஸி!.. மீண்டும் ஒருமுறை சவுத் குயின்னு நிரூபிச்ச திரிஷா?!…

ஆனா நமக்கு எந்த இடத்தில் பார்த்தாலும் கோபமே வராது. தலைமுடியை ஸ்டைலா தூக்கி விட்டுட்டு இது எப்படி இருக்குன்னு சொல்வாரு.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ஒரே நாள் பாடலைக் கேட்டுக்கிட்டே கமல் போவாரு. பாடலுக்கு அப்புறம் ரஜினி ஹீரோவா ஆகிடுவாரு. அவள் அப்படித்தான் படத்திலும் கடைசில ரஜினி ஹீரோவா ஆகிடுறாரு.

பிரியா படம் வெளியான நேரத்தில் ரஜினி மனநல மருத்துவமனையில் இருக்கிறார். இது பலருக்கும் வேறு மாதிரி தெரிந்தது. அவர் பைத்தியமா என்று அவருக்குப் பிடிக்காதவங்க கேட்க ஆரம்பித்தனர்.

அந்த நேரத்தில் பலரும் ரஜினியை வைத்துப் படம் தயாரிக்கத் தயங்குகிறார்கள். அந்த நேரத்தில் பாலாஜி ரஜினியை வைத்துப் படம் தயாரிக்க முன்வருகிறார். அதற்குப் பலரும் அவருக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் கருத்து சொல்கின்றனர்.

Billa

அந்த நேரத்தில் அவருக்கு கவியரசர் கண்ணதாசன் நம்பிக்கைக் கொடுக்குறார். அதுதான் பில்லா படம். அதுல டான் ரஜினி மிரட்டலா இருக்கிறார். கழைக்கூத்தாடியாக வரும் ரஜினி பெண் தன்மை கலந்து நளினமாக இருப்பார்.

அப்போது கழைக்கூத்தாடி ரஜினிக்கு கண்ணதாசன் பாடல் எழுதுகிறார். ‘நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு. ஊருக்குள்ள எனக்கொரு பேருண்டு. என்னைப் பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க? இப்ப என்ன செய்வாங்க?’ என்றது தான் அந்தப் பாடல்.

Also read: கங்குவாவைக் காப்பாற்ற குடும்பமே போட்ட சதித்திட்டம்? பிரபலம் எழுப்பிய சூடான கேள்வி

ரஜினிக்கு வந்த பல பிரச்சனைகளுக்கு இந்தப் பாடல் பதில் சொல்கிறது. இதுக்கு முன்னாடி வரை ரஜினியை உயர்த்தி இப்படி ஒரு பாடல் வந்தது இல்லை. இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v