40 வருஷம் கழிச்சி ரசிகர்களோடு படம் பார்த்த ரஜினி!.. ஜெயிலர் 2 செம வைப்!..
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 74 வயதிலும் ஆக்டிவாக கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் ரஜினி. தற்போதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலை கொடுக்கும் திரைப்படங்களை கொடுத்து கோலிவுட்டில் நான்தான் நம்பர் ஒன் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.
தமிழ் சினிமாவில் விஜய் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அவரின் படங்கள் வசூல் செய்ததை விட ரஜினியின் படங்கள் அதிக வசூலை பெற்றிருக்கிறது. ரஜினியின் 2.0, ஜெயிலர், கூலி போன்ற படங்கள் விஜய் படங்களை விட அதிக வசூலை செய்து சாதனை படைத்தது. அதேபோல், கடந்த 15ம் தேதி வெளியான ஜெயிலர் 2 திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது..
இதுவரை ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.600 கோடி வசூலை தாண்டி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், பல வருடங்களுக்கு பின் ரஜினி ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளார். பொதுவாக ரஜினி படம் பார்க்க விரும்பினால் அவருக்கென ஒரு பிரத்யோக காட்சி திரையிடப்படும். அதில் அவரும், அவரின் குடும்பத்தினரும் படம் பார்ப்பார்கள். ரஜினி தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்த்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஏனெனில் ரஜினி தியேட்டருக்கு சென்றால் கூட்டம் கூடிவிடும்.
இந்நிலையில், சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள P.V.R மாலில் உள்ள INOX தியேட்டரில் ரஜினி நேற்று ஜெயிலர் 2 திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்திருக்கிறார். அப்போது ரசிகர்கள் சிலரும் அவருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
