இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இன்று தைப்பொங்கல் பண்டிகையாகும். சூரிய பொங்கல் என அழைப்பார்கள். எனவே, சூரியனுக்கு முன் பொங்ல் வைத்து வணங்கி கும்பிட்டு பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
அதோடு, நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்து வருகின்றனர். வாட்ஸ் அப், டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் எல்லோரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினியும் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இன்று காலை அவரின் வீட்டின் முன்பு ரசிகர்கள் பலரும் கூடியிருந்த நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியே வந்து அனைவருக்கும் கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…