×

பாஜகவின் ஊதுகுழலாக ரஜினிகாந்த் இருப்பதில் தவறில்லை: எஸ்.வி.சேகர்

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது சிஏஏ சட்டத்தை ஆதரித்து பேசினார். இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும் அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் நானே முதல் குரல் கொடுப்பேன் என்றும் கூறினார். அதேபோல் என்.ஆர்.சி சட்டம் மிகவும் அவசியமானது என்றும் அவர் கூறினார் 

ரஜினியை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினிகாந்த் பாஜகவின் முகமாக இருந்து பேசி வருகிறார் என்றும் பாஜகவின் ஊதுகுழலாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் அவர்கள் கூறியதாவது:

திகவின் ஊதுகுழலாக திமுக இருக்கின்ற போது, பாஜகவின் ஊதுகுழலாக ரஜினிகாந்த் இருப்பதில் தவறில்லை, அதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை, குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் தேசியவாதியாக கருத்து கூறியுள்ளார் ரஜினிகாந்த்’ என்று பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News