Categories: Cinema News latest news throwback stories

அமெரிக்காவிலும் கொடி நட்ட ரஜினி படம்… இப்போது வரை எந்த படத்தாலும் முறியடிக்க முடியவில்லை!..

தமிழ் சினிமாவில் பல காலங்களாக பெரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதுவரை தமிழில் டாப் ஹீரோ என்கிற அந்தஸ்த்தை விட்டுக்கொடுக்காமல் பிடித்து வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். தற்சமயம் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு இயக்குனர்  ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் ரஜினிக்கு கோச்சடையான் லிங்கா என வரிசையாக ப்ளாப் படங்களாக வந்து கொண்டிருந்த சமயத்தில் அவரை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் கபாலி. கபாலி திரைப்படம் ரஜினியின் திரைப்பட வாழ்வையே திருப்பி போட்டது.

அமெரிக்காவில் ஹிட்:

ஒரு கமர்ஷியல் ஹீரோவாக ரஜினிக்கு தமிழில் ரீ எண்ட்ரி திரைப்படமாக கபாலி திரைப்படம் இருந்தது. மேலும் இது உலக அளவில் பெரும் சாதனைகளை படைத்தது. நிறைய நாடுகளில் கபாலிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

Rajinikanth

அப்படி வரவேற்பு இருந்த நாடுகளில் அமெரிக்காவும் முக்கியமான நாடாகும். அமெரிக்க வாழ் இந்தியர்கள் மட்டுமின்றி அமெரிக்கர்களுக்கும் கூட கபாலி திரைப்படம் பிடித்திருந்தது. இதனால் கபாலி அமெரிக்காவில் நல்ல ஹிட் கொடுத்தது. அதிக வசூல் சாதனையும் படைத்தது.

அதுவரை அமெரிக்காவில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் படைத்த திரைப்படமாக கபாலி இருந்தது. அதன் பிறகு நிறைய படங்கள் அமெரிக்காவில் வெளியாகியும் கூட கபாலி படத்தின் சாதனையை எந்த படமும் முறியடிக்கவில்லை.

இதையும் படிங்க: சூட்டிங்னு போனா அங்க துப்பாக்கி சூடு நடக்குது!..- படப்பிடிப்பில் விஜயகாந்திற்கு நடந்த அசாம்பாவிதம்…

Rajkumar
Published by
Rajkumar