×

கொரோனா காலத்தில் வெளியான ரஜினியின் முதல் புகைப்படம்  செம வைரல்!

கொரோனா ஊரடங்கினாள் மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். திரைத்துறை பிரபலங்களும் கடந்த 5 மாதங்களாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

 

மேலும், பெரும்பாலான பிரபலங்கள் இந்த நேரத்தை ரசிகர்களுடன் செலவிடுவது, வீட்டு வேலை செய்வது, தோட்ட வேலை செய்வது , சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தொடர்ந்து தங்கைகளை ஈடுபடுத்தி ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.

ஆனால், நடிகர் ரஜினிகாந்த் இந்த கொரோனா ஊரடங்கில் மோடியின் வேண்டுகோளின் படி விளக்கு ஏற்றியது. மற்றும் விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்தது என வெகு சிலவற்றில் மட்டும் தோன்றினார். இந்நிலையில் இன்று மதியம் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து மாஸ்க் அணிந்துகொண்டு லம்போர்கினி கார் ஓட்டிச்செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது. கொரோனா காலத்தில் ரஜினியை மாஸ்க் அணிந்த கெட்டப்பில் பார்ப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News