ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான ஜெயிலர் 2!.. அமேசான் ப்ரைம் அழகா வசூல் வேட்டை ஆடப்போகுது!..

 
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜெயிலர் 2 திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் வரும் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன், வித்யா பாலன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

முதல் நாளில் இருந்து 3 வாரங்கள் கடந்து சக்கைப் போடு போட்டு வரும் ஜெயிலர் 2வுக்கு அனிருத்தின் இசை, காமெடி சீன் போன்றவற்றை பெரிய பலமாக மாறியது. மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், சிவராஜ்குமார் கேமியோ காட்சிகள், நமோ நாராயணனின் மூர்த்தி அண்ணன் காமெடி காட்சிகள் கிளிக் ஆகி படம் பிளாக்பஸ்டர் ஆனது.

மேலும், இப்படம் உலகளவில் ரூ.820 கோடியைக் கடந்து சாதனை தற்போது ஐந்து மொழிகளில் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பைக் கொண்டாடிய ரசிகர்கள், வீட்டிலிருந்தே மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags

From Around the web