Connect with us
vijay

Cinema News

சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த விஜய்!.. ஒரேயொரு படம் தான்!.. விஜய்யோட டோட்டல் பாக்ஸ் ஆபிஸும் காலி!..

ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்து விட்டார் விஜய் என பயில்வான் ரங்கநாதன் தனது லேட்டஸ்ட் வீடியோவில் பொளேரென ஒரே போடாக போட்டு பேசியுள்ள வீடியோ ரஜினிகாந்த் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே முதல் 3 நாட்களுக்கு அனைத்து தியேட்டர்களுமே தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் திரையிட்ட இடங்கள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் திங்கட்கிழமைக்கு மேல் வேண்டுமானால் டிக்கெட் புக்கிங்கிற்கு ட்ரை பண்ணுங்க என திரையரங்க உரிமையாளர்கள் போர்டு வைக்கும் அளவுக்கு நிலைமை மாறிடுச்சு எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 10 பெண்கள்!.. பலான விஷயத்தில் சிக்கிய ஜெயிலர் வில்லன்!.. யார் இந்த விநாயகன்?..

விஜய் படத்தின் வாழ்நாள் வசூல் முறியடிப்பு:

நடிகர் விஜய்யின் ஒட்டுமொத்த படங்களின் முதல் நாள் வசூலை மட்டுமின்றி வெளிநாடுகளில் நடிகர் விஜய் நடித்த படங்கள் செய்த வாழ்நாள் வசூலையே ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் முறியடித்து தம்பி போய் கம்முன்னு ஒரு ஓரமா உட்காருப்பா என உட்கார வைத்து விட்டார் ரஜினிகாந்த் என பயில்வான் ரங்கநாதன் அதிரடியாக அலப்பறையை கிளப்பி இருக்கிறார்.

வாரிசு மற்றும் துணிவு படங்களின் வாழ்நாள் ஓவர்சீஸ் வசூலை ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் முதல் நாளே முறியடித்து விட்டது தான் இப்படி சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இனிமே நம்மள அசைக்க எவனும் பொறந்துக் கூட வரமுடியாதுடா என கெத்தா காலரை தூக்கிவிட்டு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தனது ரசிகர்களுக்காக வெறித்தனமான ஆட்டத்தை 72 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் ஆடியிருக்கிறார்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் திரிஷாவுடன் ஜாலி பர்ச்சஸ் செய்யும் விஜய்!.. அப்ப அந்த நியூஸ் உண்மைதானா?!..

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த விஜய்:

பொதுவாக இந்த வயதில் எல்லாருமே பிபி மாத்திரை போட்டுக் கொண்டு ரிட்டயர்ட் வாழ்க்கையை ஓய்வெடுத்து நடக்கக் கூட முடியாமல் சிரமப்படுவார்கள். ஆனால், இந்த வயதிலும் என்னவொரு வேகம், என்னவொரு ஆக்‌ஷன், என்னவொரு டான்ஸ் என அனைத்து ஏரியாக்களிலும் தலைவரு ரஜினிகாந்த் பின்னி பெடலெடுத்து இருக்கிறார் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள வீடியோவை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அந்த பக்கம் விஜய் ரசிகர்களின் நிலைமை ரொம்பவே கவலைக்கிடமாக மாறி பீஸ்ட் தான் ஆல் டைம் நம்பர் ஒன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் என வாரிசு படத்தை கழட்டி விட்டு மீண்டும் நெல்சன் இயக்கி கேஜிஎஃப் படத்திடம் பலமான அடி வாங்கிய பீஸ்ட் படத்தை கொண்டாட வைத்திருக்கிறது என்றும் கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க: தளபதி 68 சும்மா தீயா இருக்கும்!.. இந்த படத்துல அத பண்னவே மாட்டேன்.. மனம் திறக்கும் வெங்கட்பிரபு..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top