×

ரஜினிகாந்த் மீது போலீஸீல் பரபரப்பு புகார்

துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக  திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 14.01.2020 அன்று சென்னையில்‌ நடந்த துக்ளக்‌ இதழின்‌ ஆண்டு விழாவில்‌ பேசிய நடிகர்‌ ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ 1971ம்‌ ஆண்டு சேலத்தில்‌ தந்‌தை பெரியார்‌ நடத்திய பேரணியில்‌ ராமன்‌, சீதை உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர்‌ ரஜினிகாந்த்‌ பேசி உள்ளார்‌... 

இப்படிப்பட்டஒரு பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின்‌ நற்பெயருக்கு களங்கம்‌ விளைவிக்க வேண்டும்‌ என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும்‌ நடிகர்‌ ரஜினிகாந்த்‌ மீது இந்திய தண்டனை சட்டம்‌ 153& மற்றும்‌ 505 0 16 பிரிவுகளில்‌ வழக்கு பதிவு செய்து தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News