Categories: latest news throwback stories

ரஜினி திமிராகக் கேட்ட கேள்வி… பாலசந்தர் சொன்ன பதில்… அன்று எடுத்த முடிவு தான் இன்று வரை பாடம்!

ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ். கர்நாடகாவில் இருந்து நடிப்பின் மேல் கொண்ட அதீத ஆர்வத்தால் சென்னைக்கு வருகிறார். அங்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் நடைபெற்ற நடிப்புப் பயிற்சி பள்ளியில் நடிப்பைக் கற்று வந்தார்.

2 இயக்குனர்கள் வருகை

படிப்பை முடிக்கும் தருணத்தில் அவரது பள்ளிக்கு 2 இயக்குனர்கள் வருகை தருகின்றனர். ஒருவர் முரளியின் தந்தை சித்தலிங்கய்யா. மற்றொருவர் பாலசந்தர். அப்போது பாலசந்தரின் அரங்கேற்றம் படத்தை ரஜினி பல முறை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். எப்படியாவது ஒருமுறையாவது பாலசந்தரை சந்திக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.

Also read: புஷ்பா 2 FDFS!.. ஒரு டிக்கெட் 3000 ரூபாயா?.. இப்படியே போனா 3000 கோடி கலெக்ஷன் வரும் போலயே!..

அவரே இப்போது வந்து விட்டார். அதனால் எப்படியாவது அவரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று நினைத்தார் ரஜினி. அப்போது பாலசந்தர் ஒவ்வொரு மாணவரையும் கேள்வி கேட்கிறார். அதற்கு மாணவர்களும் பதில் சொல்லி விட்டு, அவர்களும் பாலசந்தரிடம் கேள்வி கேட்கின்றனர். அந்த வகையில் சிவாஜிராவைப் பார்த்து உங்கள் பெயர் என்ன என்று கேட்கிறார்.

பாலசந்தரிடம் கேள்வி

சிவாஜி ராவ் என கம்பீரமாக சொல்கிறார். உடனே சிவாஜி ராவ் பாலசந்தரிடம் கேள்வி கேட்கிறார். What to you expect from actor apart from acting? என்று. அதற்கு சிரித்துக் கொண்டே பாலசந்தர் ‘பாடம்’ என்று பதில் சொல்கிறார். முகத்தைத் துடைத்த படி ரஜினி மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார்.

பாலசந்தர் ‘பாடம்’

அப்போது பாலசந்தர் அந்தக் கேள்விக்கு மட்டுமல்லாமல் சிவாஜிராவுக்கும் சேர்த்து பதில் சொன்னார். The actor should not act outside . அந்த சமயத்தில் பத்திரிகை பேட்டி ஒன்றில் சிவாஜி ராவ் குறிப்பிடும்போது அந்த சமயத்தில் நான் கொஞ்சம் திமிராகத் தான் நடந்து கொண்டேன்.

அது எனக்கே புரிந்தது. என்னுடைய பேச்சில் கொஞ்சம் நடிப்பும் இருந்தது. ஆனால் அன்று முதல் வெளியில் நான் நடிப்பதே இல்லை என்றாராம்.

அதாவது ‘நடிப்பையும் தாண்டி நீங்கள் நடிகனிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்’ என்று ரஜினி கேள்வி கேட்கிறார். அதற்கு பாலசந்தர் ‘நடிகன் என்பவன் வெளியில் நடிக்கக்கூடாது’ என்று பதில் அளிக்கிறார்.

அந்த சந்திப்பு முடிந்ததும் ரஜினியைப் பார்த்து கைநீட்டினார் பாலசந்தர். அது கைகொடுக்க மட்டுமல்ல. திரையுலகில் கைதூக்கி விடவும்தான்.

1000 தடவை பார்த்திருக்கான்

Aval oru thodarkathai

நடிப்புப் பயிற்சி பள்ளியின் ஆசிரியர் கோபால் பாலசந்தரிடம் ‘சார் உங்க படம்னா சிவாஜி ராவுக்கு உசுரு. அவள் ஒரு தொடர்கதை படத்தையே 1000 தடவை பார்த்திருக்கான்’ என்றார். அதற்கு அவரது காதில் சிவாஜி ‘சார் 3 தடவை தானே பார்த்தேன்’ என்றாராம்.

Also read: ரஜினியின் பிறந்தநாளுக்கு 2 இல்ல!.. மொத்தம் 3 ட்ரீட்.. நடந்தா நல்லாதான் இருக்கும்?…

அப்போது அவரது காலை மிதித்த கோபால் ‘கொஞ்சம் சும்மா இரு’ என்றாராம். அப்போது பாலசந்தர் ‘உனக்குத் தமிழ் தெரியுமா’ன்னு சிவாஜி ராவைப் பார்த்துக் கேட்க, ‘கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ என்றாராம் சிவாஜி ராவ். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v