×

அஜித்தின் ரீமேக் படத்தில் ரஜினி மகள்: புதிய தகவல்

அஜித் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படமான ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெ
 

அஜித் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படமான ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அஜித் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் பவன்கல்யாண் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் மூன்று பெண்கள் கேரக்டரில் நடிக்க நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர் 

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார் படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் ரஜினியை அடுத்து தெலுங்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸ். இதனை அடுத்து தெலுங்கு மாநிலங்களில் நிவேதா தாமஸ்க்கு என ஒரு பெரிய ரசிகர் கூட்டமே ஏற்பட்டுள்ளது 

இந்த நிலையில்  நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஷராதா ஸ்ரீநாத் நடித்த கேரக்டரில் நிவேதா தாமஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மீதி உள்ள இரண்டு பெண்கள் கேரக்டரில் அஞ்சலி மற்றும் அனன்யா நடிக்க உள்ளனர்

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினி கமல் ஆகிய இருவருக்கும் மகளாக நடித்த நிவேதா தாமஸ் தற்போது அஜித் படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News