Categories: Cinema News latest news

மீனு ஏரியாவுக்கு வந்துடுச்சு.! வறுத்தெடுக்க தயாரான ரஜினி ரசிகர்கள்.!

தமிழ், ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நடிகர் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு தமிழ் என 2 மொழிகளில் வெளியாகும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். நாக வம்சிஸ் மற்றும் சாய் சௌஜன்யா என இருவரும் தயாரிக்கவுள்ளனர். இப்படத்திற்கு “வாத்தி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளது.

மேலும், இப்படத்தில் தனுஷ் ஒரு கல்லூரி ஆசிரியராக நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதை இந்தியாவில் உள்ள கல்வியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷ் ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், “மாறன்” என்கிற படமும் முடிந்து ரிலீஸ்க்கு ரெடியாகியது.

தற்போது, தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் அடுத்து இருவரும் இணைந்து கடந்த ஆண்டு தொடங்கிய “நானே வருவேன்” திரைப்படத்தில் இறுதிகட்ட chedule-லில் நடிப்பதற்கு கடைசியாக தமிழகம் வந்து சேர்ந்தார் ரஜினியின் முன்னாள் மருமகன். தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக ஊட்டி வந்துள்ளார்.

தற்போது, வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க செல்வராகவனும் தனுஷும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். மேலும், இப்படத்தின் புதிய அப்டேட் கூடிய சீக்கிரத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின், பர்ஸ்ட் சிங்கிள் பாடல் தயாராகி விட்டதாம். இதுவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்களேன்-

இதுதான் Breaking.! ரஜினி – நெல்சன் புதுப்பட போஸ்டர் ரெடி.! அதிர்ச்சியில் கோலிவுட்.!

ஆம்… இறுதிகட்ட ஷூட்டிங்கிற்காக தனுஷ் தமிழகம் வந்துள்ளார். இதற்கு முன்னர் ஹைதராபாத்தில் வாத்தி பட ஷூட்டிங்கை முடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன், பிறகு வாத்தி இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடித்த பின்பு அருண் மாதேஸ்வரன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

Manikandan
Published by
Manikandan