Categories: Cinema News latest news throwback stories

சும்மா இருக்காம சூடு வச்சிக்கிட்ட ரஜினி… ஆப்பு செம பெரிசா இருக்கும் போலயே!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிஸியாக நடித்த காலத்தில் தேவையில்லாத வேலையாக இயக்குகிறேன் என்ற பேரில் இறங்கிய ஒரு படத்தின் மோசமான தோல்வியை குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களும் நடந்து இருக்கிறதாக தெரிகிறது.

ரஜினிகாந்த் மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தில் இருந்த சமயம், இயக்க வேண்டும் என்ற ஆசையில் தன் வள்ளி படத்தினை இயக்க முன் வருகிறார். இப்படத்தின் கதை எழுதி தயாரித்தவர் ரஜினிகாந்த்.  லதா ரஜினிகாந்த் இப்படத்தில் ஒரு பாடலை பாடி இருந்தார். ரஜினியின் நண்பர் நட்ராஜ் இப்படத்தினை இயக்கினார். அவருக்கு பின்னால் இருந்து வழி நடத்தியவரும் ரஜினி தான்.

இதையும் படிங்க: இவன் மட்டும் வேணாம்! அவனும் வேணும்… அடம் பிடிக்கும் தளபதி! கோலிவுட்டின் புதுக்கதை!

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். படத்தில் எப்போதும் போல தன்னை ஏமாற்றிய நபர் வரும் போது அவரை திருமணம் செய்து கொள்ளாமல் நாயகி கொலை செய்து விட்டு தண்டனை அனுபவித்து விட்டு திரும்புவது போல அமைக்கப்பட்டு இருந்தது. 

மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்த்த நிலையில் இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய தோல்வியை தான் தழுவியது. ரஜினி இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து இருந்தார். அவருக்கு நாயகியாக நடித்த நடிகையின் முகம் கூட தெரியாத வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அநேகமாக  ரஜினிக்கு ஜோடியாக நடித்து யாருக்கும் தெரியாமலே போன நடிகை இவராகத்தான் இருப்பார். 

இதையும் படிங்க: முடியாத லியோ ஆடியோ லான்ச் பஞ்சாயத்து… கடைசி நேரத்தில் கட்டையை போட்ட தளபதி… அட போங்கப்பா!….

யூனிவர்சிட்டியில் நண்பர்களாக இருந்த ரஜினிகாந்தின் நண்பர் நட்ராஜ் முதலில் அவரின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தினை இயக்கினார். பின்னர் அண்ணாமலை படத்தில் உதவி இயக்குனராக இருந்தார். இப்படத்தின் கதையை யோசிக்கும் போது ரஜினிக்கு கிளைமேக்ஸ் தான் தோன்றியதாம். அதை வைத்தே கதையை வளர்த்ததாக ஒருமுறை தெரிவித்திருந்தார்.

இப்படத்தின் நாயகியாக பிரியாராமன் நடித்திருந்தார். அவரை தன்னுடைய படத்தில் அறிமுகம் செய்ய பாரதிராஜா தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் ரஜினி தன்னுடைய ஆசையை கூற உடனே அவருக்காக ப்ரியாராமனை விட்டு கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இத்தனை முயற்சி எடுத்தும் கூட படம் மிகப்பெரிய ப்ளாப் என்பது தான் கவலையான செய்தியே!

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily