×

ஏன் தப்பா பேசுறீங்க... லைவ்வில் திடீரென கண்ணீர் விட்டு அழுத சீரியல் நடிகை!

சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் ரச்சிதா. அதன்பிறகு அவர் நடித்த சீரியல்கள் அனைத்தையும் நாம் பார்த்திருப்போம்.

 

இப்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அண்மையில் ரச்சிதா இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் நடிகை சித்ராவின் மரணம் குறித்து பேசி அழுதுள்ளார். ஒருத்தி சென்ற பின்பு அவளை பற்றி தவறாக பேசுவது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஏன் இந்தத் துறையில் நடிகைகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று முத்திரை குத்த காத்துக் கொண்டிருக்கிறீர்கள். சித்ரா விஷயத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. நாங்கள் இருவரும் ஒரே மாதிரி இருக்கிறோம் என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறேன், அவருமே ஒருமுறை என்னிடம் கூறியுள்ளார் என பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News