Thalaivar 173: ரஜினிக்காக தனுஷிடமும் கதை கேட்ட கமல்!.. நடந்தது இதுதான்!..
ரஜினியும் கமலும் 50 வருட கால நண்பர்கள் என்றாலும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி இதுவரை எந்த படத்திலும் நடித்ததில்லை. கடந்த சில வருடங்களாகவே ராஜ்கமல் பிலிம்ஸ் தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனம் தயாரித்த தக் லைப் திரைப்படம் கமலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அந்த நிறுவனத்திற்கு ரஜினி 2 படங்கள் நடித்து கொடுக்க முடிவு செய்ததாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் அந்த படத்திலிருந்து வெளியேறினார் சுந்தர்.சி. அவர் என்ன காரணம் என்ன சொல்லவில்லை என்றாலும் சுந்தர்.சி சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லை என சொல்கிறார்கள். எனவே நிறைய பேரிடம் கதை கேட்டது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம். பல இளம் இயக்குனர்களும் போய் கதை சொன்னார்கள். அதில் பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையை டிக் அடித்திருக்கிறார் ரஜினி. அவரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இந்நிலையில்தான் ரஜினிக்காக தனுஷிடமும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கதை கேட்ட சம்பவம் வெளியே கசிந்திருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்பு தனுஷ் ரஜினியிடம் ஒரு கதை சொல்லி அதை டேக் ஆப் ஆகும் நிலையில் தனுஷ் சில படங்களில் நடிக்க போய் விட்டதால் அது நடக்காமல் போய்விட்டது. அதன்பின் தனுஷும் ஐஸ்வர்யாவை பிரிந்துவிட்டதால் அது எப்போதும் நடக்காத நிலை ஏற்பட்டது.
அந்த கதை தனுஷிடம் இருந்தால் வாங்கலாம் என யோசித்த ரஜினி இதுபற்றி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் சொல்ல அந்நிறுவனம் தனுஷை தொடர்பு கொண்டு ‘நீங்கள் அப்போது ரஜினியிடம் சொன்ன கதை இப்போதும் உங்களிடம் இருக்கிறதா?’ என கேட்டிருக்கிறார்கள். தனுஷும் அந்த கதையை கொடுக்க சம்மதித்திருக்கிறார்.
தனுஷின் இயக்கத்தில் ரஜினி நடிக்க மாட்டார் என்பதால் கதையை மட்டும் அவரிடமிருந்து வாங்கி வேறு இயக்குனரை வைத்து படத்தை எடுக்கலாம் என நினைத்திருக்கிறார்கள். னால் அதற்குள் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து போய்விட அது இப்போது டேக் ஆப் ஆகியிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
