Rajkiran, Thippusulthan
ஒரு காலத்தில் ராஜ்கிரணின் படங்கள் என்றாலே தாய்க்குலங்களின் மத்தியில் கொண்டாட்டமாகத் தான் இருக்கும். வீட்டு வேலைகளை எல்லாம் சட்டு புட்டுன்னு முடித்து விட்டு சாயங்காலம் தியேட்டருக்குக் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து விடுவார்கள். என்ன காரணம்னா அவரு படத்தில ஒரு ரெட்டை அர்த்த வசனங்களும் கிடையாது.
ஆபாசமான காட்சிகளும் கிடையாது. குடும்பத்தை சீர்படுத்தும் உறவுகளை மையமாகக் கொண்டு தான் அத்தனை படங்களும் அமைந்திருக்கும். அதுவும் கிராமிய மணம் கமழ எடுத்து இருப்பார். இவர் படத்தில் நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மட்டுமல்லாமல் இனிமையான பாடல்களுக்கும் பஞ்சம் இருக்காது.
rajkiran2
ஆரம்பகாலத்தில் ராஜ்கிரண் சினிமா துறையில் அடி எடுத்து வைக்கும் போது நடிகர் ராமராஜனை வைத்து இரு வெற்றிப்படங்களை எடுத்தார். ஆனால் படம் வெற்றிப் படம் தான். எனக்குத் தான் நஷ்டம் என்கிறார். அது எப்படி என்று அவர் சொல்ல கேட்கலாம்.
ராசாவே உன்னை நம்பி, என்னப் பெத்த ராசா இரண்டு படமும் நல்லா போச்சு. ஆனா தயாரிப்பாளரா எனக்கு நஷ்டம்.
படத்தை நானே தயாரித்ததும் பூஜையிலேயே விற்றுவிடும். நான் 10 ஸ்ரீ 15 பர்சன்ட் லாபம் வச்சி விற்றுவிடுவேன். அப்புறம் என்னாகும்னா படம் எடுக்கும் போது என்னால காம்பரமைஸ் ஆக முடியாது.
en rasavin manasile
எனக்கு திருப்தி வரும் வரை நல்லா எடுக்கணும்னு நினைப்பேன். அப்போ கொஞ்சம் கூடுதலா செலவு ஆகிடும். அப்போ வட்டிக்கு வாங்கித் தான் படம் எடுக்க வேண்டிய சூழல் வரும். விற்றவங்கக்கிட்ட போய் திரும்ப கேட்க முடியாது. அது கௌரவக்குறைச்சல்னு நினைப்பேன். அப்படித்தான் அந்த 2 படமும் எனக்கு நஷ்டமாகிடுச்சு.
வட்டிக்கு வட்டின்னு அது மீட்டர் மாதிரி ஓடிக்கிட்டு இருக்கும். நம்ம தூங்கினாலும் வட்டி தூங்காது. இந்த நேரத்துல ரொம்ப எனக்கு நெருக்கடியாச்சு. என் ராசாவின் மனசிலே, எல்லாமே என் ராசாதான், அரண்மனைக்கிளின்னு தொடர்ந்து 3 வெள்ளி விழா படங்கள். நான் நல்லா சாப்பிடுவேன்.
சின்ன வயசுல இருந்து எங்க அம்மா சொன்னது என்னன்னா எலும்புல தான் சத்து இருக்குது. உள்ளுக்குள்ள ஓரு சாறு இருக்கும். அது தான் உடம்புக்கு சத்து. அப்படின்னு சொன்னதனால எனக்கு வெறும் சதையை சாப்பிட பிடிக்காது.
en rasavin manasile
எலும்போட இருக்குற சதை. அந்த சதையைக் கடிச்சி தின்னுட்டு அப்புறம் எலும்ப கடிச்சி நொறுக்கி நல்லா மாவாக்கிட்டு சாறை பிழிஞ்சிட்டு சக்கையைத் துப்பணும். அப்ப தான் மட்டனோ சிக்கனோ சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தி இருக்கும்.
ஈசியா கதைல நான் திருப்தி அடைஞ்சுற மாட்டேன். அதுல ஒரு விஷயம் இருக்கு. ஏன்னா 2 வெள்ளி விழாப்படங்கள் கொடுத்துருக்கோம். அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான். அதனால அடுத்து கொடுக்க வேண்டியது அதை விட பெரிய வெற்றிப்படமா இருக்கணும்னு ஆவலோட இருப்பேன். அதனால அதுக்குரிய விஷயங்கள் கிடைக்க லேட்டாயிக்கிட்டு இருக்கு.
இடையில 2 ஸ்கிரிப்ட் பண்ணினேன். பண்ணி முடிச்சு பார்த்தா மறுபடி மனசு திருப்தி ஆகல. இது பத்தாது. இன்னும் வேற மாதிரி பண்ணனும்னு தோணுது. அப்புறம் இன்னொரு சப்ஜெக்ட் பண்ணினேன். அதுக்கு கொஞ்சம் மெனக்கிட்டு பண்ணி கிண்ணி பார்த்தா அதுலயும் திருப்தி வரல. இப்போ வேற ஒண்ணு பண்ணிக்கிட்டு இருக்கேன். அது தான் ராசாவின் மனசிலே பார்ட் 2.
என் ராசாவின் மனசிலே படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. வைகைப்புயல் வடிவேலு அறிமுகமான படம். 1991ல் கஸ்தூரி ராஜாவின் தயாரிப்பில் இந்தப்படத்தின் இசையை இளையராஜா அமைத்து இனிய பாடல்களைக் கொடுத்தார். மீனா தான் ஜோடி. ராஜ்கிரண் இந்தப்படத்தில் முரட்டுத் தோற்றத்தில் மாயாண்டியாக நடித்து அசத்தியிருப்பார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.
என் ராசாவின் மனசிலே 2ம் பாகம் குறித்து இயக்குனர் ராஜ்கிரண் பேஸ்புக் தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இறை அருளால் என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்தநாள்.
என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு திரைக்கதையை எழுதிக்கொண்டிருக் கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Vijay: விஜய்…
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…