Dhanush
Dhanush: நடிகர் தனுஷை விட தற்போது இயக்குனர் தனுஷ் மீது தான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம். இந்நிலையில் அவரின் அடுத்த திரைப்படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
நடிகர் தனுஷ் தற்போது குபேரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் பிசியாக இருக்கிறார். நடிப்பில் ஒரு பக்கம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் தனுஷ் தன்னுடைய டைரக்ஷன் பணிகளையும் தற்போது துரிதப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் செய்யும் கோபி.. சண்டையிட்டு கொள்ளும் முத்து, மீனா… பாண்டியனுக்கு பிறந்தநாள்…
இவர் இயக்கத்தில் முதலில் வெளியான பா பாண்டி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பீல் குட் மூவியாக ரசிகர்களிடம் பாராற்றைப் பெற்ற இப்படத்தில் முக்கிய இடத்தில் ராஜ்கிரண் மற்றும் ரேவதி நடித்திருந்தனர்.
இப்படத்தை தொடர்ந்து கொஞ்சம் பிரேக் விட்டிருந்த தனுஷ் தற்போது மீண்டும் டைரக்ஷனில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் சமீபத்தில் ராயன் திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த வருடத்தில் மிகப்பெரிய வசூலை குவித்த முக்கிய படங்களில் ராயனும் இடம் பிடித்தது.
தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இளவயது நடிகர்களை வைத்து உருவாகும் இப்படத்தின் கோல்டன் ஸ்பேரோ என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் புகழை பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க:செல்போன் சுவிட்ச் ஆப்! நாட் ரீச்சபிள்.. எங்கே போனார் ஜெயம் ரவி? ஷாக்கிங் ரிப்போர்ட்!..
இந்நிலையில் தனுஷ் தற்போது தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் கசிந்து இருக்கிறது. இப்படத்தை ஆகாஷ் என்னும் புதுமுக தயாரிப்பாளர் தயாரிக்க இருக்கிறார். 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக தகவல்கள் வெளியானது.
Rajkiran_ashokselvan
தற்போது அது மட்டுமல்லாமல் நடிகர் அசோக் செல்வன் மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுவரை இப்படத்தில் நடிக்க இருக்கும் ஹீரோ யார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. ஒரு வேலை தனுஷின் நடிக்க இருக்கிறாரா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
TVK VIJAY…
Dhanush: இட்லி…
Vijay: கரூர்…
Kaur: கடந்த…
Vijay TVK:…