திரிஷ்யம் 3 தெலுங்கு உரிமை: நீதிமன்றத்தை நாடிய தயாரிப்பு நிறுவனம்

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் திரிஷ்யம். முதல் பாகத்தின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து திரிஷ்யம் 2 திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் நேரடியாக வெளியானது. அங்கும் அப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த  நிலையில் திரிஷ்யம் 3 இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 
Drishyam 3

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் திரிஷ்யம். முதல் பாகத்தின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து திரிஷ்யம் 2 திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் நேரடியாக வெளியானது. அங்கும் அப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த  நிலையில் திரிஷ்யம் 3 இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தினை தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரிலும் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும் ரீமேக் செய்தது ஸ்ரீபிரியாவின் சேதுபதி தியேட்டர்ஸ் நிறுவனம் ஆகும்.

இந்த நிலையில் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள  திரிஷ்யம் 3  திரைப்படத்தின் தெலுங்கு மொழி ரீமேக் மற்றும் வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக புதிய சட்ட சர்ச்சை உருவாகியுள்ளது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்த திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான முழுமையான மற்றும் பிரத்யேக உரிமை தங்களுக்கே இருப்பதாகக் கூறி,  சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

அதில்  திரிஷ்யம் பட தயாரிப்பு நிறுவனமான ஆசிவாத் சினிமாஸ் சார்பில் எம்.ஜே. ஆண்டனி, பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸ் மற்றும் தொடர்புடைய தரப்பினர்கள்,  திரிஷ்யம் 3  திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் பதிப்புரிமையை மீறும் வகையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும், இதற்காக நிரந்தரத் தடை உத்தரவு வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மே 20, 2026 அன்று விசாரணைக்கு வந்தபோது, நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி வாதிட்டார். வாதங்களை கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

திரிஷ்யம் 3  திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழுமையான உரிமையாளர்களாக உள்ள ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது உரிமையை பாதுகாக்கும் நோக்கில்  நீதிமன்றத்தை நாடியுள்ளது.

From Around the web