×

அண்ணாத்தே படப்பிடிப்பு ரத்து - அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்தே’ திரைப்படத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார்.
 

இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அதன்பின் சில காட்சிகளை கொல்கத்தா மற்றும் புனேவில் எடுக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், இந்தியாவின் வட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு சென்று படப்பிடிப்பு நடத்தும் திட்டத்தை படக்குழு கைவிட்டுள்ளது. 

மேலும், அந்த காட்சிகளை ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே எடுக்க  படக்குழு திட்டமிட்டுள்ளது. அண்ணாத்தே மட்டுமில்லாமல், பல திரைப்படங்களில் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News