ரஜினியை வைத்து வாய்ப்பு வந்தும் படம் பண்ணாத பார்த்திபன்… காரணத்தை மட்டும் கேட்டுறாதீங்க!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்துப் படம் பண்ண எத்தனையோ தயாரிப்பாளர்கள் தவமாய் தவமிருந்து வருகின்றனர். ஆனால் வாய்ப்பு வந்து கதவைத் தட்டிய போதும் அதைக் கண்டும் காணாமலும் இருந்துள்ளார் ஒரு பிரபலம். இப்படி யாராவது செய்வார்களா? ஆம். அவர்தான் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்.
எப்பவுமே சொந்தப் படைப்பு தான். காபி அடிச்சிப் படம் எடுப்பது என்பது இவரது அகராதியிலே இல்லை. அப்படி இருக்கும்போது இவர் உள்ளே வெளியே போன்ற படங்களில் நடித்து பீக்கில் இருந்த கால கட்டம். ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் பார்த்திபன் அதை ஒத்துக்கொள்ளவில்லையாம். என்ன காரணம்னு அவரே சொல்கிறார். பார்க்கலாமா?
இப்போது 74 வயதிலும் இளம் ஹீரோவைப் போல பந்தாவாக ரஜினி கூலி படத்தில் நடித்துக் கலக்கியுள்ளார். அப்படின்னா அண்ணாமலை படம் எல்லாம் வந்தபோது எவ்வளவு மார்க்கெட்டில் இருந்து இருப்பார் என்று எண்ணிப்பாருங்கள். அந்த நேரம் நடிகர் பார்த்திபனிடம் ரஜினி கோஸ்ட்னு ஒரு படம் வந்துருக்கு.
அதுல மந்திரவாதி கேரக்டர்ல நான் கெஸ்ட்ரோல்ல நடிக்கிறேன். நீங்க படத்துல நடிங்க. நாம எடுக்கலாம்னு ஐடியா கொடுத்தாராம். எங்கிட்ட எஸ்.பி.முத்துராமன் சாரும் படம் பண்ணுவோம்னு கேட்குறாருன்னு சொல்லி இருக்கிறார். அதுக்கு நமக்குத் தான் வயசு இருக்கே. எஸ்.பி.முத்துராமன் சார் பண்ணட்டும்னு ரஜினி சாரிடம் சொல்லிட்டேன்னு பார்த்திபன் சொல்கிறார். அப்போது ரஜினி பார்த்திபனைப் பார்த்து நீங்க எவ்ளோ உயரம்னு கேட்டுள்ளார்.
அதாவது உங்க மனசு என்ன அவ்வளவு பெரிசா என்பதுக்கான அர்த்தத்தில் தான் அப்படி கேட்டாராம். பார்த்திபனும் ரஜினியை வைத்து முத்து படம் மாதிரி ஸ்டைலில் இல்லாமல் வேற ஒரு புது ஸ்டைலில் ரஜினியை வைத்துப் படம் பண்ணலாம் என்று ஒரு ஆசை வைத்து இருந்தாராம். ஆனால் வாய்ப்பு வரும்போது ஹவுஸ்புல், குடைக்குள் மழை மாதிரியான படங்களில் பிசியாக இருந்துள்ளார்.
அதனால் ரஜினியை வைத்துப் படம் பண்ணுவதைப் பெரிய ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லையாம். எஸ்.பி.முத்துராமனுக்காக பார்த்திபன் விட்டுக்கொடுத்த படம் தான் பாண்டியன். அந்த வகையில் எப்பவும் சொந்தமான கதையை வைத்துப் படம் பண்ணுவதுதான் அலாதி ஆர்வம் என்கிறார் தமிழ்சினிமா உலகிற்கு புதிய பாதை வகுத்த பார்த்திபன்.
