Categories: latest news throwback stories

போட்டோகிராபரிடம் எரிஞ்சி விழுந்த ரஜினி… சாயங்காலம் ஆனா அவருக்கு மூடே மாறிடுமாம்….!

பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பிரபல சினிமா போட்டோகிராபர் ஸ்டில்ஸ் ரவி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக ரஜினி உடனான தனது மோதல் குறித்து இப்படி தெரிவித்து இருந்தார்.

சிவா

கவிதாலயா தயாரிப்பில் சிவா என்ற படத்துக்கு ஸ்டில் எடுக்க வேண்டி இருந்தது. அன்னைக்கு முதல் நாள் சூட்டிங். அன்னைக்கு ஷாட்டுக்கு ஷாட் செக் பண்ணித்தான் எடுக்கணும். ஸ்டேண்ட் போட்டுத்தான் ஸ்டில் எடுக்கணும்.

ரஜினி ஸ்டில்

Also read: எல்லாரும் மாறிட்டாங்க… ரஜினி மட்டும்தான் பெண்டிங்!.. மனம் மாறுவாரா சூப்பர்ஸ்டார்?!…

சாயங்காலம் அஞ்சரை மணி ஆகிடுச்சு. ‘ரஜினி ஸ்டில்’னு சொன்னேன். ‘என்ன நீங்களும் ஷாட்டுக்கு ஷாட் ஸ்டில் எடுக்கணுமா?’ன்னு மூஞ்சைத் தூக்கிக்கிட்டுக் கேட்டாரு. எனக்கு ஒரு மாதிரியா ஆகிடுச்சு. உடனே அவர் முன்னாடியே கேமராவை மூடுனேன். ஏவிஎம்ல 8வது ப்ளோர்ல சூட்டிங்னு நினைக்கிறேன். பர்ஸ்ட் ப்ளோருக்கு நடந்தே வந்துட்டேன்.

இன்னிக்கு இதோட இந்த படத்தை விட்டுருவோம்னு நினைச்சேன். அன்னைக்கு ஷோபனாவோட அருமையான சாங். நல்ல காஸ்டியூம். பின்னாடியே அவரோட உதவியாளர் ஜெயராம் ஓடிவந்தாரு. ‘சார் உங்களைக் கூப்பிடுறாரு’ன்னு சொன்னாரு. அப்போ ‘தம்’ அடிச்சிக்கிட்டு இருந்தாரு ரஜினி. ‘என்ன ரவி கோவிச்சிட்டீங்களா?’ன்னு கேட்டாரு. ‘ஆமா’ன்னு சொன்னேன். ‘பார்த்தேன்… பார்த்தேன்’னாரு.

சாயங்கால பழக்கம்

‘நீ எப்டி கஷ்டப்பட்டு பெரிய ஆளா இப்படி வந்தீங்களோ, அதே மாதிரி தான் நானும் வந்துருக்கேன். என்னை நேரடியா திட்டுனா கூட நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன். ஆனா என் தொழிலப் பத்தி சொன்ன ஏத்துக்க முடியாது’ன்னு சொன்னேன். உடனே ‘சாரி சாரி எனக்கு உடம்பு சரியில்லை. ஏதோ ஒண்ணு சொல்லிட்டேன்’னாரு.

siva

அப்புறம் தான் அமீர்ஜான் சொன்னாரு. சாயங்காலம் ஆனா அவருக்கு தண்ணீ அடிக்கப் போறப் பழக்கம் உண்டு. டென்ஷனா ஆகிடுவாருன்ன சொன்னாரு. எனக்கு அப்போ எல்லாம் இது தெரியாது. அப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன் என்கிறார் ஸ்டில்ஸ் ரவி.

கிரேட் ரஜினி

ஆனா அவரு உண்மையிலேயே கிரேட். அப்பவே கண்ணாடி முன்னாடி நடிச்சிப் பழகுவாரு. புதுமுகங்கள் கிட்ட அதை சொல்லி அவரை மாதிரி பழகுங்கன்னு சொல்வேன். அப்புறம் எளிமையானவர். இதை முகஸ்துதிக்காக சொல்லல என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Also read: Bloody Beggar: பிளடி பெக்கர் லாஸ்… யோசிக்காமல் நெல்சன் செய்த செம மேட்டர்… நீங்க கிரேட்டு சார்…

1989ல் பாலசந்தர் தயாரிக்க, அமீர்ஜான் இயக்கிய படம் சிவா. ரஜினி, ஷோபனா, ரகுவரன், வினுசக்கரவர்த்தி, டெல்லிகணேஷ், ராதாரவி, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அருமை. அட மாப்பிள்ளை, அடி கண்ணாத்தாள், அடி வான்மதி, இருவிழியின் வழியே, வெள்ளிக்கிழமை ஆகிய பாடல்கள் உள்ளன.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v