Categories: Cinema News latest news throwback stories

ரஜினியோட அந்தப் படம் 3 படையப்பாவுக்குச் சமமா..? அப்புறம் ஏன் மிஸ் ஆச்சு?

2011ல் ரஜினிகாந்தை வைத்து கே.எஸ்.ரவிகுமார் புராண இதிகாசப் படம் ஒன்றை எடுப்பதற்காக கதை, திரைக்கதை எழுதி இயக்குவதாக இருந்தார். அதுதான் ராணா.  இந்தப் படத்தில் நடிக்க ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே என்றும், இசை ஏஆர்.ரகுமான் என்றும் அறிவித்தார்கள்.

ஆனால் படம் தான் வராமலேயே போய் விட்டது. இந்தப் படம் ரஜினி காந்த் இதுவரை நடித்த படங்களிலேயே மிகப்பெரிய சூப்பர்ஹிட்டாக வந்து இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. படையப்பாவை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுமாம். அப்படி ஒரு படம் ஏன் வராமல் போனது? வாங்க பார்க்கலாம்.

ரஜினிகாந்துடன் பல படங்களில் நடித்துள்ளீர்கள். அவரோட கதை விவாதத்தில் கலந்து கொண்டு இருக்கிறீர்களா என சித்ரா லட்சுமணன் ரமேஷ் கண்ணாவிடம் கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

ரஜினிகாந்துடன் அதிகமாக ஒர்க் பண்ணிய அசிஸ்டண்ட் டைரக்டர்களில் நானும் ஒருவன். கோச்சடையான், ராணா, முத்து, படையப்பா என நாலஞ்சு படத்துக்கு நான் அசிஸ்டண்ட் டைரக்டர். கதை விவாதத்தில் அருமையான மனிதர் ரஜினிகாந்த். அவரிடம் ஒளிவுமறைவு கிடையாது.

Rajni

ராணா படம் வந்து 3 படையப்பாவுக்குச் சமம். அதுல ஒரு ஹீரோ ராணா தான். அவரு பேருல தான் டைட்டில். ஒண்ணு அப்பா அவரு தான் கோச்சடையான். 2 பையன். அதுல ஒருத்தர் தான் சேனா. அப்பவே நான் ரவிக்குமார் கிட்ட சொன்னேன். நீங்க எத்தனை படம் வேணாலும் எடுங்க. ராணா எடுக்காம ஒங்க லைப் முடியாது. ரொம்ப கஷ்டமான சப்ஜெக்ட்.

ஆனா படம் வந்தது லைப் லாங் படம் அவருக்கு அதுதான். எல்லா சீனுமே அற்புதமான சீன். எல்லாமே ஹைலைட்டா இருக்கும். அதை வந்து அவர் என்ன காரணத்துக்காக நிறுத்தி வச்சிருக்காருன்னு எங்களுக்கே தெரியல. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராணா படம் தான் கோச்சடையானாக வந்தது என்று அப்போது பேசப்பட்டது. ஆனால் அது அப்படி அல்ல. கோச்சடையான் படத்தை இயக்கியவர் ரஜினியின் மகள் சௌந்தர்யா. கதை அமைத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். ரஜினியின் கோச்சடையான் படம் இந்தப் படத்தின் முந்தைய பாகம் தான் என்று சௌந்தர்யா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
ராம் சுதன்