Categories: Cinema News gallery latest news

அந்த மனசு தான் சார் கடவுள்…. ராஜுவின் செயலை பார்த்து கலங்கிய சஞ்சீவ்!

பிக்பாஸ் வீட்டில் ராஜுவின் செயலை கண்டு வியந்து பாராட்டும் ஆடியன்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே ஆடியன்ஸ் மனதை கவர்ந்து வருபவர் ராஜு. இவரின் காமெடி பலருக்கும் பிடித்துவிட அதற்காகவே நிகழ்ச்சியை பார்க்க துவங்கியவர்களும் உண்டு. அதுமட்டுமல்லாமல் நியாயத்திற்காக குரல் கொடுப்பது. யார் தவறு செய்தாலும் தட்டி கேட்பது என மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில், நாமினேஷனில் இருந்து போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதற்காக 8 பேர் இரண்டு இரண்டு பேர்களாக பிரிந்து கொடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்து அதில் இருப்பவரை காப்பாற்றலாம்.

இதில் ராஜு, சஞ்சீவ் இருவரும் சஞ்சீவின் புகைப்படத்தை காட்டினார். இருவரும் ஒரே புகைப்படத்தை காட்டினால் புகைப்படத்தில் இருக்கும் நபர் காப்பற்றப்படுவார் என்பது விளையாட்டின் விதி. எனவே இந்த டாஸ்கில் சஞ்சீவ் சேவ் ஆகிவிட்டார். ராஜு தன் புகைப்படத்தை காட்டாமல் சஞ்சீவ் புகைப்படத்தை காட்டி அவரது ஆசையை நிறைவேற்றினார்.

இதையும் படியுங்கள்: உன் Structure-க்கு நாங்க அடிமை…. நடிகையிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

என் குடும்பம் இந்த வீட்டிற்கு வரும் வரையாவது நான் இந்த வீட்டில் இருக்கவேண்டும் என சஞ்சீவ் தனது ஆசையை கூற ராஜுவும் கிட்டத்தட்ட அதையே தான் கூறினார். பிக்பாஸ் வீட்டில் உங்களை பார்க்க வரும் போது அந்த வீட்டை சுத்தி பார்க்கவேண்டும் என சஞ்சீவ் மகள் ஆசைப்பட்டதை நிறைவேற்றி அவரை காப்பாறியதாக கூறி எல்லோருடைய மனதை இதமாக்கிவிட்டார்.

பிரஜன்
Published by
பிரஜன்