இவர் தான் என் மனைவி... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜே ரக்ஷன் வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்கில் ரசிகைகள்
விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
Sat, 13 Feb 2021

விஜய் டிவியின் புகழ் பெற்ற குக் வித் கோமாளியின் தொகுப்பாளர் ரக்ஷன். இதற்கு முன்னர், கலக்கபோவது யாரு நிகழ்ச்சியையும் தொகுத்து வந்தார். சமீபத்தில் வெளியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கிட்டத்தட்ட இளைஞிகளின் கனவுக்கண்ணனாக இருக்கும் ரக்ஷன் பேச்சிலர் இல்லை என்ற ஷாக் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதெல்லாம் புரளியாக இருக்கும் என நினைக்காதீங்க. இதை வெளியிட்டது ரக்ஷன் தான். தன் மனைவி எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதுவும் அப்படம் 10 வருடம் முன்னர் எடுக்கப்ப்பட்டதாம். ஆனால், அவரின் மனைவி பெயர் போன்ற பிற விவரங்கள் தெரியவில்லை. இதனால், அவரின் ரசிகைகள் செம பீலிங்கில் இருக்கிறார்கள்.