வீடு முழுக்க சரக்கு… இப்போ என்ன இருக்கு? குதூகலத்தில் ரக்ஷிதா!
ரக்ஷிதா மகாலட்சுமி:
நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி "பிரிவோம் சந்திப்போம்" சீரியலில் நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலமாக பெயரும் புகழும் அவருக்கு கிடைத்தது.
பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றார் ரக்ஷிதா. தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
புதிய ஸ்கூட்டர்:
நேர்காணல் ஒன்றில் எடுக்கப்பட்ட ஹோம் டூர் வீடியோவில் அவரது வீடு முழுக்க அலமாரி முழுக்க சரக்கு பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் வெளிநாட்டு சரக்குகளை ஒவ்வொன்றாக விளக்கியிருந்தார். இது சமூக வலைதளவாசிகளிடையே மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் நடிகர் ரக்ஷிதா மகாலட்சுமி புதியதாக ஒன்றை வாங்கி இருக்கிறார். ஆம், மகாலட்சுமி புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி அதன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட அது அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
