Categories: Cinema News Gossips latest news

இவரைத்தான் லவ் பண்றேன்.. ஆனா இப்போதைக்கு திருமணம் இல்லை!! பிரபல நடிகை ஓபன்!

தடையற தாக்க படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பின் தீரன், தேவ், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் அறிமுகமானது என்னவோ கன்னடா படத்தில்தான். ஆனால், முதல் படத்திற்குப்பின் இவர் கன்னடாவில் ஒரு படம்கூட நடிக்கவில்லை.

தற்சமயம் தெலுங்கு, ஹிந்தியில் இவர் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் அதிலிருந்து தேறிவந்த பின் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஹிந்தி சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் உலா வந்தது. ஆனால் ரகுலோ அரைடஜன் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து ரசிகர்களுக்கு இவர் திருமணம் செய்துகொள்வாரா மாட்டாரா என்ற சந்தேகம் வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேசிய ரகுல் நான் ஜாக்கியைத்தான் காதலிக்கிறேன். ஆனால், இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை. கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன், அப்போது உங்களுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்துவேன் என்றார்.

ரகுல் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான், கமலுடன் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது

ராம் சுதன்
Published by
ராம் சுதன்