6 மணிக்கு மேல ஆம்பளையா மாறும் ஹீரோயின்!.. ராம் அண்ட் லீலா விமர்சனம்!..

 
ral

இராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்க ரியோ ராஜ், வர்த்திகா, சேத்தன், மாளவிகா அவினாஷ், மாகாபா ஆனந்த், தீபா வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ராம் அண்ட் லீலா திரைப்படம் சமீபத்தில் குஷ்பு மகள் தயாரிப்பில் வெளியான டபுள் ஆக்குபன்ஸி படத்தை போலவே உருவாகியுள்ளது.

இரண்டு படங்களின் இயக்குநர்களும் ஒரே இங்கிலிஷ் படத்தை பார்த்து காப்பியடித்தார்களா? என்கிற கேள்வி தான் எழுகிறது. 

கொரியன் வெப்சீரிஸில் ஏற்கனவே மை கேர்ள் ஃபிரெண்ட் இஸ் ஆன் ஏலியன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அந்த வெப்சீரிஸின் டச்சும் உள்ளே ஒளிந்திருக்கிறது. 

வழக்கம் போல 90ஸ் கிட் ரியோ ராஜுக்கு திருமணமே ஆகவில்லை என்றும் பெண்ணே கிடைக்கவில்லை என அவரது அப்பா சேத்தனும் அம்மா மாளவிகா அவினாஷும் புலம்புகின்றனர். ரகுராம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரியோ ராஜுக்கு ராம் என்கிற நண்பன் அறிமுகமாகிறான். 

கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கலைன்னு ஃபீல் பண்ணதா லோக்கல் டிரெய்ன்லதான் அழகான பெண்கள் வரும் என ஐடியா கொடுக்க, லோக்கல் டிரெய்னில் லீலாவை பார்க்கிறார் ராம்.

சிக்குனாண்டா சிவனாண்டி என்பது போல ரியோ ராஜ் காதலை அசடு வழிந்து சொல்வதற்கு முன்பாக அனைத்து பச்சைக் கொடியையும் ஹீரோயினே காட்டும் போதே உஷாராகி இருக்க வேண்டாமா? பொண்ணு கிடைக்காத காஜி காரணமாக எல்லாத்துக்கும் மண்டையை மண்டையை ஆட்டும் ஆடு போல ஹீரோ காதலில் விழுந்து விடுகிறார்.

ஆனால், 6 மணிக்கு மேல், லீலா ஆம்பளையா மாறிவிடுவதை அறியும் இடத்தில் அதிர்ச்சியில் உறையும் ராம் அதன் பின்னரும் காதலை தொடர்ந்தாரா? காதலியை கரம் பிடித்தாரா? இல்லையா என்பது தான் ராம் அண்ட் லீலா படமே.

ரியோ ராஜ் சிவகார்த்திகேயன் போல ஜாலியாக நடிச்சு காமெடி பண்ண டிரை பண்ணுகிறார். ஆனால், நமக்குத்தான் படம் வேறு ஏதோ கிரகத்தில் ஓடுவது போன்ற ஃபீலிங்கை கொடுக்கிறது. அதுவும் மாகாபா ஆனந்த் டிரான்ஸ்ஃபர்மேஷன் எல்லாம் ஜீரணிக்க முடியாத கொடுமையாகவே உள்ளது. 

ஹீரோயினாக நடித்துள்ள வர்த்திகா, நண்பன் ராமாக நடித்துள்ள அந்த நடிகர், அவரை காதலிக்கும் ரியோவின் தங்கை கதாபாத்திரம், சந்தானம் காமெடிக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை தீபா வெங்கட் என போர் அடிக்காமல் செல்ல நிறைய விஷயங்கள் இருந்தாலும், படம் பல இடங்களில் பொறுமையை சோதிக்கிறது.

ரேட்டிங்: 2.5/5.

Tags

From Around the web