அடடா இது ஆந்திரா பைசன்!.. சூப்பர்மேன் ராம் சரண்.. பெத்தி பாஸா?.. ஃபெயிலா?.. விமர்சனம் இதோ!..
மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் படத்தை போன்ற கதைதான் ராம் சரண் நடிப்பில் வெளியாகி உள்ள பெத்தி படமும். பொதுவாகவே ஸ்போர்ட்ஸ் டிராமா படங்கள் என்றாலே கஷ்டப்பட்டு முன்னுக்கு வரும் நபரை பற்றிய கதையாகத்தான் இருக்கும்.
ரயிலில் டிக்கெட் கலெக்ட்டர் வேலை செய்தவர் எப்படி தோனியாக மாறினாரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த தோனி பயோபிக் ரசிகர்களை கவர்ந்து வசூலில் கல்லா கட்டியது போல இந்த பெத்தி படமும் பெத்த கலெக்ஷன் அள்ளும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
ராம் சரண் படத்துக்கு திருஷ்டிப் பொட்டுப் போல ஜான்வி கபூர் வரும் சீன்கள் எல்லாம் படத்தின் தரத்தையே கெடுக்கும் வகையறாவாக இருந்து விடுகிறது.

மிர்ஸாபூர் வெப்சீரிஸில் மிரட்டிய திவ்யந்துவை குஸ்தி போட்டியில் ராம் சரணுக்கு எதிராக வைத்திருக்கலாம். அவரது திறமை பண்ணையார்த்தனம் பண்ணும் நபராக வைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டதாகவே தெரிகிறது.
ஜான்வி கபூரின் பாவாடை ஸ்டேஜில் அவிழ்க்கும் இடமெல்லாம் பகீர் கிளப்புகிறது. நல்லவேளை புச்சி பாபு சனா வெற்றி மாறனின் விடுதலை படத்தை போலவும் ஜெய்பீம் படத்தை போலவும் காட்சிப்படுத்தவில்லை.
ஆட்டக் கூலியாக கிரிக்கெட் ஆடும் ராம் சரணின் திமிர்த்தனம் ஆகட்டும், சிவராஜ் குமாரிடம் சிஷ்யனாக மல்யுத்தம் கற்கும் இடத்தில் டிசிபிளினான மாணவனாகவும் ராம்சரண் மிரட்டுகிறார்.

கிளைமேக்ஸில் இன்னொரு புதிய ஸ்போர்ட்ஸிலும் அவர் பங்கேற்க என்னப்பா ராம் சரணை மட்டுமே ஒலிம்பிக்கில் அனுப்பினால் 3 விளையாட்டுகளில் தங்கம் வென்று வந்துவிடுவார் போல தோன்றுகிறது. அப்படியொரு சூப்பர் மேனாகவே படம் முழுக்க காட்சி தருகிறார். அவர் பக்கத்தில் குட்டி டிரெஸ் போட்டுக் கொண்டு ஒட்டுமொத்த கவர்ச்சி காட்டி ஜான்வி கபூர் நின்றாலும் பெரிதாக தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் இன்னமும் அடையாளம் தெரியாத நபர்களும், பெயரே இல்லாத பல்லாயிரக்கணக்கான ஊர்களும் இருக்கும் விஷயத்தை டச் செய்த இடத்தில் டைரக்டர் பாராட்டுக்களை அள்ளுகிறார். இந்த படம் கண்டிப்பாக பல மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கும் கஷ்டம் கஷ்டம் என சொல்லிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் நாம படுறது எல்லாம் கஷ்டமே இல்லை என்கிற புரிதலை கொடுத்து இன்ஸ்பயர் செய்யும். கண்டிப்பாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெத்தி படம் பார்க்க போங்க. ஜான்வி கபூர் ராம் சரண் முத்தக் காட்சியில் மட்டும் சில்லறையை கீழே போட்டு விடுங்க.
பெத்தி - பெருமை!
ரேட்டிங் - 3.75
