டைரக்டர்களை எப்படி சூஸ் பண்ணனும்னு இவர்கிட்டத்தான் கத்துக்கணும்!.. ஆர்சி 17 இயக்குநர் இவர்தான்!

 
டைரக்டர்களை எப்படி சூஸ் பண்ணனும்னு இவர்கிட்டத்தான் கத்துக்கணும்!.. ஆர்சி 17 இயக்குநர் இவர்தான்!
மகதீரா, ஆர்ஆர்ஆர் என ராஜமெளலியுடன் இரு பிரம்மாண்ட படங்களில் நடித்த ராம்சரண் அடுத்தடுத்து பெரிய பெரிய இயக்குநர்களை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இன்னும் பல ஆண்டுகளுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பேன் என்கிற உறுதியை ஏற்படுத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு இயக்குநர் வேட்டையே ரொம்ப கஷ்டமான விஷயமாக உள்ள நிலையில், தெலுங்கில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் இயக்குநர்களை ராம்சரண் எப்படித்தான் பிடித்துப் போடுகிறார் என்றே தெரியவில்லை என்கின்றனர். டைரக்டர்களை எப்படி சூஸ் பண்ணனும்னு இவர்கிட்டத்தான் கத்துக்கணும்!.. ஆர்சி 17 இயக்குநர் இவர்தான்! இதையும் படிங்க:  வீட்ல இப்பவும் சிவாஜிராவ் தான்!.. ரகசியமா பண்ண வேலையை அம்பலப்படுத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!.. ராஜமெளலியுடன் ஆர்ஆர்ஆர் படத்தை முடித்த கையோடு ஷங்கர் உடன் இணைந்து கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிகிறது. அடுத்ததாக ஆர்சி 16 படத்தின் பூஜையை சமீபத்தில் போட்டிருந்தார் ராம்சரண். உப்பென்னா படத்தை இயக்கி ராம்சரணுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த புச்சி பாபு சனா அந்த படத்தை இயக்குகிறார். ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். டைரக்டர்களை எப்படி சூஸ் பண்ணனும்னு இவர்கிட்டத்தான் கத்துக்கணும்!.. ஆர்சி 17 இயக்குநர் இவர்தான்! இதையும் படிங்க:  சூர்யா – சுதாகொங்கரா ‘புறநானூறு’ படம் டிராப் ஆனதுக்கு காரணம் இதுதானாம்!.. அடக்கடவுளே!… இந்நிலையில், ஆர்சி 17 படத்துக்கான இயக்குநரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் ராம்சரண். அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா, புஷ்பா 2 படங்களை இயக்கியுள்ள சுகுமார் தான் ராம்சரணின் 17வது படத்தையும் இயக்கப் போகிறார். 2 குதிரைகள் சிம்பலுடன் ஆர்சி 17 அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. தமிழில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

From Around the web