தமிழுக்கு வருகிறாரா ராம் சரண்... அவரை இயக்கப்போகும் முன்னணி இயக்குனர்...

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் இயக்குனர் ஷங்கர் என்பது ஊரறிந்த விஷயம். முக்கியமான ஒரு சமூக பிரச்சனையை பேசும் படத்தையே இயக்கி வருகிறார். தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தினை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் பெரிய விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தற்போது படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஷங்கர் இயக்கும் அடுத்தப்படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்கும் படத்தை ஷங்கர் இயக்குகிறாராம். நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்க இருக்கிறார். இது ராம்சரணின் 15வது படமாகும். தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் டைட்டில் மற்றும் மற்ற கலைஞர்கள் குறித்த முக்கிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Excited to announce our new venture with @AlwaysRamCharan and Dil Raju @SVC_Official
— Shankar Shanmugham (@shankarshanmugh) February 12, 2021
தற்போது ராம்சரண் இயக்குனர் ராஜமௌலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார்.