ஜான்வி கபூர் பஞ்சாயத்து வெடித்தாலும்!.. பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் பெத்தி!.. இத்தனை கோடியாம்!..

 
peddi

நடிகர் ராம் சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான பெத்தி திரைப்படம் உலகளவில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. திரைப்படம் வெளியாகி ஏழு நாட்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை ரூ.345 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ராம் சரண் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். முதல் நாளிலேயே மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற இப்படம், தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'பெத்தி' திரைப்ப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம், விளையாட்டு, உணர்வு மற்றும் சமூகப் போராட்டத்தை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ram

1990-களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை, ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு சிறிய மலைக்கிராமத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. அதிகாரப்பூர்வ பெயரோ, முகவரியோ இல்லாத அந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக அடையாளமின்றி வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களின் வாழ்க்கையில் நுழையும் கதாநாயகன், கிரிக்கெட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அவர்களின் உரிமை மற்றும் அடையாளப் போராட்டத்திற்கு குரல் கொடுப்பதே படத்தின் முக்கியக் கதைக்களமாக அமைந்துள்ளது.

ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு வெளியான பெரிய படங்களில் ஒன்றாக கருதப்படும் பெத்தி,  ஏழு நாட்களில் வெரும் ரூ.345 கோடி வசூலை எட்டியிருப்பது திரைப்பட வணிக வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அடுத்தடுத்த வார இறுதிகளிலாவது வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web