Peddi Box Office : 400 கோடி கிளப்பில் இணைந்த ராம் சரணின் 'பெத்தி'!
டோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ராம் சரண் நடிப்பில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆன படம் தான் 'பெத்தி'.
இந்த படத்தை 'உப்பெனா' புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படமான இதில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்க, முக்கிய வேடங்களில் ஷிவராஜ்குமார், ஜெகபதி பாபு, பொம்மன் இரானி, ரவி கிஷன், விஜி சந்திரசேகர், ஜான் விஜய், ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், 'உலக நாயகன்' கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அதன்படி இதுவரை இப்படம் ரூ.400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
