மேடையில் பாய்ந்து வந்த ரசிகர்- அலறிய ஜான்வி கபூர்

சினிமா நடிகர் , நடிகளுக்கு பொது  நிகழ்ச்சிகளிலோ அல்லது திரையுலக விழாக்களிலோ கலந்துகொண்டால் அவர்களை பாதுகாப்பதே மிகப்பெரிய சவால்தான்.
 
janvi kapoor

சினிமா நடிகர் , நடிகளுக்கு பொது  நிகழ்ச்சிகளிலோ அல்லது திரையுலக விழாக்களிலோ கலந்துகொண்டால் அவர்களை பாதுகாப்பதே மிகப்பெரிய சவால்தான். ரசிர்கள் அவர்கள் மேல் உள்ள பாசத்தால் பாய்ந்து விடுவார்கள். பலர் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.  

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ராம் சரண், ஜான்வி கபூர் நடித்த  பெத்தி திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரசிகர் ஒருவர் ராம் சரணை சந்திக்க திடீரென மேடையில் ஓடிவந்தார். அப்போது அருகில் உட்கார்ந்திருந்த ஜான்வி கபூர் பயந்து கண்களை மூடிக் கொண்டார். அப்போது  ராம் சரண் பாதுகாவலர்கள் மின்னல் வேகத்தில் வந்து அந்த ரசிகரை அலேக்காக தூக்கி சென்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

From Around the web