மயிலு பொண்ணு அந்த விஷயத்தில் சூப்பர் - வெட்டப்பட வைத்த ராம் சரண்!
ஸ்ரீதேவி மகள்:
மறைந்த இந்திய லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆன நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தென்னிந்திய மொழிகளில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகர் ராம் சரனுக்கு ஜோடியாக பெட்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது நடிகை ஜான்வி கபூரின் நடிப்பை குறித்து பேசிய நடிகர் ராம்சரண்....
புகழ்ந்த ராம் சரண்:
ஜான்வி மாதிரி ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகையை இதுவரையும் நான் பார்த்ததே இல்ல. நான் எத்தனையோ நடிகைகள் கூட நடிச்சிருக்கேன். நாங்க கடைசியா ஷூட் செய்த பாடலில் கூட என்னை விட 100 மடங்கு அதிகமா சிறப்பா நடிச்சிருக்காங்க ஜான்வி

எனவே எங்களோட இந்த ஜோடி ரசிகர்களை எப்போதுமே ஏமாற்றாது என நடிகை ஜான்வியை புகழ்ந்து தள்ளினார் ராம்சரண். ராம் சரணின் இந்த பேச்சைக் கேட்டு ஜான்வியின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து விட்டது. இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஜூனியர் என்டிஆர்க்கு ஜோடியாக தேவரா என்ற திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்தார். இது அவரது இரண்டாவது தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
