
Cinema News
உருவாகப் போகும் ரமணா 2.. ஹீரோவாக நடிக்கப்போவது யார்?.. பரபர அப்டேட்
Ramana 2: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்து 2002ம் வருடம் வெளியான திரைப்படம்தான் ரமணா. சொந்த வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் அரசு அலுவலங்களில் பணிபுரியும் தனது மாணவர்களை வைத்து ஒவ்வொரு அரசு துறையிலும் அதிக லஞ்சம் வாங்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து கொலை செய்வார். அதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் விஜயகாந்தை வித்தியாசமான கோணத்தில் காட்டி இருந்தார் முருகதாஸ். இந்த படத்திற்கு முருகதாஸ் அமைத்திருந்த கதை, திரைக்கதை மற்றும் படத்தின் முடிவு எல்லாமே ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில்தான் தற்போது இப்படத்தில் இரண்டாம் பாகம் உருவாகப் போகிறது.

ரமணா படத்தை தயாரித்தவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். ஐ திரைப்படத்திற்கு பின் இவர் எந்த திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை. 20 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டுகளில் படம் எடுக்கும் தயாரிப்பாளராக இருந்தவர் இப்போது சைலன்ட் மோடில் இருக்கிறார்.
சமீபத்தில் ரமணா 2 என்கிற தலைப்பை தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். எனவே இப்படம் விரைவில் துவங்கப்படும் என கணிக்கப்படுகிறது. ஆனால் இதில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்த படைத்தலைவன் பட விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் ‘வாங்க.. ரமணா 2 எடுப்போம்’ என பேசினார்.
தற்போது அது உண்மையாகி இருக்கிறது. அதே நேரம் இந்த படம் எப்போது துவங்கப்படும்? யார் இயக்குனர்? என்கிற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.