சாமானியனை தொடர்ந்து அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ராமராஜன்!
தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என்று அழைக்க்படுவர் ராமராஜன். 80 ,90களில் இவரது பல படங்கள் சூர்ப்பர் ஹிட் ஆகின. எல்லா நடிகர்களும் பெரிய தயாரிப்பாளர்கள் இயக்குனரிகளிடம் சொல்லும்போது இவரோ புதிய தயாரிப்பாளரகள் மற்றும் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்தார். இவர் நடிப்பில் வெளீவந்த கரகாட்டகாரன் 365 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவரது படங்கள் ஒரு காலத்தில் ரஜினிக்கு இணையாக வசூல் செய்தன. ஒரு கட்டத்தில் இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்க தவறியதால் தொடர் தோல்விகளை கொடுத்து திரையுலகிலிருந்து விலகினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் 2024ல் வெளி வந்த படம் சாமானியன். இந்த படம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடி சதனை புரிந்தது. இன்றும் தென் மவட்டங்களில் ராமராஜனுக்கு என்றே ரசிகர்கள் உள்ளனர் என்பது இந்த வெற்றி மூலம் தெரிகிறது.

இந்த நிலையில் ராமராஜன் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான கதை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை ராமராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவராம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
