1000 கோடி வசூலை தாண்டிய ராமாயணா! - 8 நாள் வசூல் அப்டேட்...

 
ramayana

இந்தியாவைப் பொறுத்தவரை தொலைக்காட்சி தொடராக இருந்தாலும் சரி.. திரைப்படமாக வந்தாலும் சரி ராமாயண கதைக்கென  ரசிகர்கள் இருக்கிறார்கள். எத்தனை முறை படமாகவும், சீரியலாகவும் எடுக்கப்பட்டாலும் அதை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

அப்படித்தான் பாலிவுட் இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவான ராமாயணா திரைப்படம் கடந்த 5ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளிலும் இந்த படம் வெளியானது.. இந்த படம் 2 பாகமாக உருவாகியுள்ள நிலையில் தற்போது முதல் பாகம் வெளியாகியிருக்கிறது..

இந்த படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், ராவணனாக யஷ்ஷும் நடித்திருந்தனர். சாய்பல்லவி சீதையாக நடித்திருந்தார். இதற்கு முன் எடுக்கப்பட்ட ராமாயண படங்களில் சீதையை மிகவும் அமைதியானவராகவே காட்டப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தில் சீதை ஆக்ரோசமாக சண்டை போடுவது போல காட்சிகளை வைத்திருந்தார்கள். அதற்கு பல விமர்சனங்களும் வந்தது.

இந்த படத்தில் உருவாக்கப்பட்டிருந்த கிராபிக்ஸ் காட்சிகளும், யஷ்ஷின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளதால் ராமாயணா படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.. படம் வெளியாகிய 8 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் ஆயிரம் கோடியை தாண்டியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் ராமாயணா திரைப்படம் ரூ.675 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது..

Tags

From Around the web