×

ஆன்லைனில் திருமணம் செய்யும் ராமாயணம் நடிகை!

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்நிலையில் பல பிரபலங்களும் எளிமையான முறையில் திருமணம் செய்து வருகின்றனர். ஆனால் இதெற்கெல்லாம் ஒரு படி மேலே போய் நாகினி சீரியலின் நடிகை சயாந்தனி தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார். இவர் புகழ்பெற்ற ராமாயணம் தொடரிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலர் அனுராக் திவாரியை மணக்கும் ஐடியாவில் இருக்கிறாராம். அவர் கூறும்போது "இந்த நிலைமை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. குறைந்தது 2 அல்லது 3 மாதங்கள் கூட ஆகலாம். எனவே நாங்கள் இருவரும் ஆன்லைனில் முகம் பார்த்து திருமணத்தை முடித்துக்கொண்டு. பின்னர் சமயம் வாய்க்கும் போது ரிஜிஸ்டர் திருமணம் செய்யலாம் என்று யோசிக்கிறோம். அப்படி செய்யும் போது நிச்சயம் அறிவிப்போம்" என்று கூறியுள்ளார். நடிகையின் இந்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News