11வது நாளில் ரூ.75 கோடி வசூல்!.. ஜவான் , ஸ்த்ரீ 2 சாதனைகளை முறியடித்த ராமாயணா !

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் நடிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணா
 
ramayana movie

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் நடிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணா . 2 பாகங்களை கொண்ட இப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அதன் நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், யாஷ் நடிப்பு உள்ளிட்ட பல அமசங்கள் பலராலும் பாராட்டப்படுகிறது.

இந்த நிலையில் ராமாயணா படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் இப்படம் குவித்துள்ள வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 11வது நாளில் மட்டும்  ராமாயணா திரைப்படம் இந்தியாவில் ரூ.75 கோடி நிகர வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் முதல் 11 நாட்களில் இப்படத்தின் மொத்த நிகர வசூல் ரூ.760.60 கோடியை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ஷாருக்கானின்  ஜவான் ,  ஸ்த்ரீ 2 ,  சாவா ஆகிய திரைப்படங்களின் இந்திய வசூல் சாதனைகளையும் ராமாயணா முறியடித்துள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வசூலில்  துரந்தர் 2  திரைப்படத்தைவிட ராமாயணா அதிக வசூல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் பலர்ரையும் வியக்கவைத்துள்ளது. இதே வேகத்தில் வசூல் தொடர்ந்தால், இந்தியாவில் ரூ.800 கோடி நிகர வசூல் என்ற மைல்கல்லை இப்படம் விரைவில் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sai Vikas
Sai Vikas

122 Articles

Sai vikas is an experienced digital journalist with 16years of expertise in online news reporting. He specializes in covering cinema and sports

Tags

From Around the web